உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இனம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 தமிழ் இனம்

செய்தலே சிறந்த கடனுகத் தமிழர் கொண்டிருந்தனர் என்பது,

“ நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உருவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே ‘ என்னும் புறநானூற்றுச் செய்யுளாலும் விளங்கும். இதுவே ஒப்பற்ற அறம் என்று மணிமேகலையில் அறவண அடிகள் அறைந்திருத்தல் அறியத்தகும். இதனைச் சாத்தனர் வற்புறுத்திக் கூறியிருத்தல் படித்து மகிழத் தகும்.

! அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள்: மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லதிது கண்ட தில் ‘ இங்ஙனம் வற்புறுத்தப்படும் அன்னதானம் மணிமேகலையிற் பல இடங்களிற் கூறப்பட்டுப் பளிக்கறையுள் மாணிக்க ஒளிபோல் விளங்குதல், பண்டைத் தமிழர் அன்னதானத்தைப் போற்றி வளர்த்த அருஞ்செயலை நமக்கு நினைவூட்டுவ தாகும். -

இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா; புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் ; மிக்க அறமே விழுத்துணை யாவது ‘ ஆதலின், அன்னதானம் பிற தானங்கள் அனைத்தி னும் தலையாயது என்பது பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/81&oldid=1361474" இலிருந்து மீள்விக்கப்பட்டது