பக்கம்:தமிழ் இனம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழ் இனம்

மாறுபாடு உண்டு. இப்பகுதியில் வள்ளைப்பாட்டும் வரைவு கடாதலும், கைக்கிளையும் பலமுறை (Repition) கூறப்பட்டுள்ளன.

சுருங்கக்கூறின், இக்குறிஞ்சிக்கலிச் செய்யுட்கள் களவியல் சூத்திரங்களையும் பொருளியற் சூத்திரங்களையும் அகத்திணையியற் சூத்திரங்களையும் துணைக்கொண்டு எழுந்தவை என்னல் மிகையாகாது.

இக்குறிஞ்சிக்கவிச் செய்யுட்கள் படிக்கப்படிக்க ஓரளவு இன்பம் பயப்பன; பல பாக்களில் பொருட் செறிவு உண்டு.

1. காதல் வழிபாடு

தலைவி கூற்று

(1) “ஒரு தலைவன் என்னைக்கண்டு காதல் கொண்டான் ; கொண்ட காதலைக் கூறானாய், என்னைத் தன் நோய் புலப்படப் பார்த்துப் பலநாளும் மீண்டான். பலநாளும் அவன் வந்துவந்து போதலைக்கண்ட யான், அவனைப்பற்றியே நினைவு கொண்டேன் ; இரவில் உறக்கம் பெற்றிலேன் ; அவனோ, தன் குறையைக் கூறிலன் ; எனக்கோ அவனை நோக்கி, ‘நின் வருத்தத்திற்கு நானும் வருந்தினேன்’ எனக்கூற நாணம் இடம் தந்திலது. ஆயினும் இந்நிலை நீட்டிப்பின் அவன் இறந்துபடுவனோ என்று கருதி, நாணமற்ற செயல் ஒன்றைச் செய்தேன் : யான் ஒரு நாள் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது, தலைவன் அங்கு வழக்கம்போல வந்தான், யான் நாணம் இழந்து, ‘ஐயனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/83&oldid=1359248" இலிருந்து மீள்விக்கப்பட்டது