பக்கம்:தமிழ் இனம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக்கலி

87

சிறிது பொழுது என்னை ஊசலாட்டுவாயாக’ என்றேன். அவ்வளவில் புத்துயிர்பெற்ற தலைவன், 'தையால், நீ கூறியது நன்று' என்று ஊசலாட்டினான். அப்பொழுது யான் கைந்நெகிழ்ந்து வீழ்ந்தேனாக அவன் கருதும்படி அவன் மார்பின்கண் வீழ்ந்தேன். அதனை அவன் உண்மை எனக்கருதி, என்னை விரைய எடுத்து அனைத்துக்கொண்டான். யான், 'பிறர் காண்பார்' என விரைய, 'ஒண் குழாய், நீ போ,' என்று கூறிக் கண்ணோட்டஞ் செலுத்தினான். அதனால் நான் மெய்ம்மறந்து அவன்மீது கிடந்தேன்.” (செ-1)

(2) “தோழி, இதனைக் கேள் : நாம் பண்டு சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்து விளையாடியபோது, நம் சிற்றிலைக்காலால் அழித்துத் துன்பம் செய்த பட்டிமகன் ஒருநாள் யானும் யாயும் வீட்டிலிருந்தபோது வந்தான்; 'நீர் வேட்கை' என்றான். அன்னை பொன்சிரகத்தில் நீர் தந்து என்னை அனுப்பினாள். யான் அவனுக்கு நீர் தந்தபோது, அவன் என் முன்கையைப்பற்றி நலிந்தான்; யான், அன்னாய், இவன் செயலைக் காண்’ என்றேன். அன்னை அலறிப் படர்ந்தாள். யான் உண்மை கூறாது, ‘இவன் உண்ணுநீர் விக்கினான்' என்றேன். அன்னை அவன் முதுகைத் தடவினாள். அப்போதவன் என்னைக் கடைக்கண்ணாற் கொல் வான்போல் நோக்கித் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்தினான்.”(செ-15 )

(3) “ஒருவன், 'மெல்லிய தோளையுடையாய்! நின் அடியில் யான் உறைதற்கு நீ அருள்வாய்' எனக்கூறி, எனது சடைமாலை ஒன்றைத் தன் விர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/84&oldid=1378967" இலிருந்து மீள்விக்கப்பட்டது