பக்கம்:தமிழ் இனம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழ் இனம்

லால் முறையாகச் சுற்றி, அதனை மோந்து பார்த்தான். என் கையைக்கொண்டு தன் கண்களை மறைத்துப் பெருமூச் செறிந்தான்; என் தொய்யில் எழுதிய நகில்களை இனியவாகத் தடவினான்; என் மெய்ம்முழுவதும் இன்பம்பெறத் தழுவினன்; அச் செயலால் யான் அவன் கைப்பட்ட வருத்தத்தைப் போக்கினேன். ஆதலின், இச்செய்தியை யாய் முதலியோரிடம் கூறி, அவனுக்கே என்னை மணம் புரியச் செய்வாயாக.” (செ-18)

இம்மூன்று செய்திகளாலும் தலைவனும் தலைவியும் நட்புப் பெறுதல்-நட்புப்பெறும் முறை-இருவர் கருத்தும் ஒருமைப்படல் இன்ன பிறவும் நன்குணரலாம்.

2. நாடகக் காட்சி

20, 21, 22, 23, 26, 28, 29 முதலிய எண்ணுள்ள செய்யுட்களில் வருஞ் செய்திகள் சிறந்த நாடகக் காட்சிகளாக இடம்பெறத் தக்கவை. காட்டாக, 20-ஆம் செய்யுளை இங்குக் காட்டுவோம்:

காமஞ்சாலா இளமைப்பெண் சிறந்த அழகுடன் காட்சியளிக்கிறாள். அவளைக் கண்ட இளைஞன் ஒருவன், பூவும் மயிரும் தம்முள் மயங்கும்படி முடித்துக் கொண்டு இங்கு வருபவர் யார்? கொல்லிமலைப் பாவையோ? நல்லார் உறுப்பெலாங் கொண்டு வல்லான் வகுத்த அழகியோ? பெண்ணுருவம் கொண்ட கூற்றமோ? இல்லை. இவள் இவ்வூர் மகளாகவே காணப்படுகிறாள், இவளைக் காத்தவர் இவ்வாறு தனியே விடுதல் கொடிது என்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/85&oldid=1378974" இலிருந்து மீள்விக்கப்பட்டது