பக்கம்:தமிழ் இனம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குறிஞ்சிக்கலி

89

பின்னர் அவன் அவளை நோக்கி, “நல்லாய், யான் கூறுதலைக் கேள்” என்று அவளைத் தடுத்து,

‘ கண்டவர் காதல் கொள்ளும் பண்புடை யாளே, உன்னுடைய அன்ன நடையும், மயிற்சாய லும், புறவின் மடப்பமும்-கண்டோர் கருத்தை ஈர்க்கும் என்பதை நீ அறிவாயோ? அறியாயோ?”

‘நிறத்தாலும் திரட்சியாலும் மூங்கிலை ஒத்தும் மென்மையால் அணையை ஒத்தும், காமக்கடலை நீந்தத் தெப்பமாதலால் புணையைஒத்தும் விளங்கும் நின் தோள்கள்-நின்னைக் கண்டார்க்குத் துன்பம் செய்யும் என்பதை நீ அறிவாயோ? அறியாயோ?”

“கோங்கின் இளமுகை போன்றதும், அடி வரைந்து கட்புலனாண குரும்பை போன்றதும், மழை மொக்குளைப்போன்றதும் ஆகிய நின் இளைய நகில்கள்-நின்னைக் கண்டார் உயிரை வாங்கும் என்னும் நிலைமையை நீ அறிவாயோ? அறியாயோ? ‘ எனக் கேட்கின்றான்.

அவள் பேசாது நிற்கின்றாள் ; போக முயல்கின்றாள். அவ்வெல்வை அவன், ‘பதில் கூறாது செல்பவளே, யான் கூறுவதைக் கேள் : நீயும் தவறிலை; உன்னைப் புறப்படச்செய்த நுமரும் தவறிலர்; மதம்பிடித்த யானையைப்பறையறைந்தபின் வெளிச் செல்ல விடுதல் போலப் பறைசாற்றியபின் உன்னை வெளியே வரவிடச்செய்யாத அரசனே தவறுடையான்’ என்று முடிக்கின்றான் ; காட்சி முடிகின்றது. இத்தகைய இனிய காட்சிகள் இக்கலியில் பலவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/86&oldid=1459217" இலிருந்து மீள்விக்கப்பட்டது