பக்கம்:தமிழ் இனம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



94

தமிழ் இனம்

இனியதென்று பருகுவரே அன்றி, அது நீர்க்கு இனியதெனப் பருகுவரோ? (செ. 26)

நகைச்சுவை :

தோழி, தலைவியிடம் தலைவன் சிறைப்புறத்தா னாகக் கூறல் :

‘நேற்றிரவு நடந்த வேடிக்கையைக் கேள் : தலைவன் வரவை எதிர்நோக்கி யான் வெண் துகிலைப் போர்த்துக்கொண்டு நள்ளிரவில் குறி யிடம் சென்று நின்றேன். மயிரற்ற தலையும் கருங்குட்டத்தால் குறைந்தகையும் காலும் உடையநாம் அறிந்த முடமாகிய முதிர்ந்த பார்ப்பான் அங்கிருந்தான். அவன் என்னை நோக்கி, பெண்கள் நிற்கத்தகாத இந்நள்ளிரவில் வந்து இங்கு நிற்கும் நீ யார் ? என்று முற்படக் கூறி, சிறியவளே, நீ என்னிடம் அகப்பட்டாய், என்று கூறிப் பையெனப் பணிந்து, வைக்கோலைக் கண்ட முதிய எருதைப்போல என் பக்கத்தினின்றும் போகாதே நின்றான் ; நின்று, தையால், தம்பலம் தின்பாய் என்று தன் பையைக் குலைத்து, நீ எடுத்துக் கொள் என்றான். யான் வாய் திறவாமல் நின்றேன். அவன் அஞ்சினான் ; சிறிது எட்ட நின்று, நீ பெண்பாற் பசாசு , யான் ஆண்பாற் பசாசு. எனக்கு அருள் செய். இல்லையேல் நீ பெறும் பலியை ஊராரைக் கொண்டு நிறுத்துவேன் ’ என்று பல பேசினான். யான் உடனே ஒரு கையில் மணலை அள்ளி அவன் மீது விடாது தூவினேன். அவன் ஊரார் கேட்க அலறி ஓடினான். அக் காமுகன் நேற்றிரவு செய்த நாடகம் இதுதான். தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/91&oldid=1459219" இலிருந்து மீள்விக்கப்பட்டது