பக்கம்:தமிழ் இனம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குறிஞ்சிக்கிலி

95

வனைக் காணச் சென்ற இடத்தே அக்காமுகன் இருந்த தன்மை-புலியைப் பிடிக்க வைத்த வலையிலே குறுநரி அகப்பட்ட தன்மையாயிற்றன்றாே?"

(செ. 29)

இத்தகைய சுவை பயக்கும் செய்திகள் இக்கலியில் மேலும் பல உள. அவற்றை நூல் கொண்டு உணர்க.

5. உவமைகள்

குறிஞ்சிக்கலியுள் உள்ளுறை உவமங்கள் பல உள: ஒரு சில அணி வகைகள் உள ; 124 உவமைகள் இருக்கின்றன. [1] அவற்றுள் காட்டாக ஆறு தருதும்.

(1) சிவபெருமான் உமையம்மையோடு இருந்த கயிலையை ஐயிரு தலையுடைய அரக்கர் கோமான் பெயர்க்க முயன்று முடியாது கதறியது போல-யானை (புலியென நினைந்து) வேங்கை மரத்தைத் தன் கோட்டாற் குத்தி, அதனை மரத்தினின்றும் வாங்க மாட்டாது மலைப் பக்கமெல்லாம் கேட்கும்படி ஓசையிட்டு அலறியது. (செ. 2)

(2) கற்புடை மகளிர் நாணி இறைஞ்சு நிலை போலத் தினக்கதிர் முற்றித் தாழ்ந்து இருந்தது. (செ. 4)

(3) எதிர் எதிராக இருக்கும் மலைகளிலிருந்து அருவி நீர், இடைநிற்கும் வேங்கை மரத்தின் மீது பாயுந்தன்மை,-இரண்டு யானைகள் பூவொடு கூடிய நீரைத் தாமரை மலர் மீதுள்ள இலக்குமி மீது சொரிதலைப் போன்று இருந்தது.

  1. நாவலர் ந. மு. வே. நாட்டார், கபிலர், பக். 128.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/92&oldid=1394366" இலிருந்து மீள்விக்கப்பட்டது