பக்கம்:தமிழ் இனம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குறிஞ்சிக்கலி

99

பொன்னால் செய்த பலவகைப் பூக்களைச் செய்து கூந்தலில் அணிவர்; மகரவாயாகச் செய்த தலைக் கோலத்தைக் கூந்தலில் வைத்து அணிதலும், பொன்னைக் கூறுபடுத்தின வகிர்களைக் கூந்தலில் வைத்து, இடையிடையே தாழம்பூவின் போழையிட்டு அழகு செய்தலும் உண்டு (செ. 19); பிறர்க்குப் பொற்கரகத்திலும் நீர் கொடுத்து உதவுவர் (செ. 15); பாறையில் உள்ள பள்ளத்தையே உரலாகவும், சந்தன மரத்தாற் செய்த உரலையும் பயன் படுத்துவர்; சந்தன மர உலக்கை, யானைக் கொம்பால் செய்த உலக்கை இவற்றை நெல் குற்றப் பயன் படுத்துவர்; சேம்பின் இலையைச் சுளகாகக் கொள்வர்; தலைவனைப் பாடி நெல் குற்றுவர் (செ. 4, 5, 6, 7) , மணம் கை கூடின், வரையுறை தெய்வத்திற்குப் பலியிடுவர் (செ. 10) , மெய் தொட்டுச் சூள் செய்வர் (செ. 27); வரையுறை தெய்வத்தை நினைந்து குரவையாடுவர் (செ. 3): ஞாழல் பூவைத் தலையில் சூடிக் கொள்வர் (செ. 20).

3. புலி யானையைக் கொல்லும் வன்மையுடையது; யானையின் செவி மறைவில் மறைந்து அதன் மேல் பாயும். (செ. 16)

4. யானை புலியோடு போர் செய்யும்; அதன் உருவம் போன்ற பூத்த வேங்கை மரத்தைக் கண்டு பொறாது, அதனைத் தாளில் குத்தி நெரிக்கும் (செ.2); புலியை வென்ற வருத்தத்தோடு செல்கையில் வேங்கை மரத்தைத் தாக்கிச் சினந்தணியும்; கனவில் அப்புலியைக் கண்டு அஞ்சி எழுந்து, புலி போல் பூத்திருக்கும் வேங்கை மரத்தை அழித்துச் சினந்தணியும்; பின்னர் அதனைக் காண்கையில் நாணமுற்றுத் தலை தாழ்த்துச் செல்லும் (செ. 18); தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/96&oldid=1394370" இலிருந்து மீள்விக்கப்பட்டது