பக்கம்:தமிழ் இனம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழ் இனம்

மேல் பாய்ந்த புலியின் மருமத்தில் கோட்டால் குத்தி அதனை வீழ்த்தும் (செ. 16); பிடி தன்பால் இருக்கையில் வேறு யானை வருமாயின், அதன் நுதலிங் கோட்டால் குத்தித் தாக்கும் (செ. 17); சூல்கொண்ட பிடிக்குக் கரும்பினை ஒடித்து ஊட்டும் (செ. 5); பானை அருவி ஒலியில் தூங்கும் (செ. 6).

5. காந்தன் : இதன் முகை இரத்தம்பட்ட யானைக் கொம்பு போல இருக்கும் (செ. 17). இது மழைக்காலத்தில் செழித்திருக்கும் (செ.17). பூ மிக்க மணமுடையது (செ. 23); காந்தட்குலை அரவு உருவம் உள்ள து (செ. 9).

6. வேங்கை : இதன் அடி முழவுபோல இருக்கும் (செ. 8); வேங்கை மரம் புலியின் நிறம்போலப் பூக்கும் (செ. 2).

9. மக்கள் ஒழுக்க நிலை

1. காதல் கொண்ட கணவரை மணத்தலே குறிஞ்சி நிலப் பெண்கள் இயல்பு; வேறு மணம் பேசலை விரும்பார்; தம் களவைக் குறிப்பால் பெற்றோர்க்கு உணர்த்துவர்; அவர் உடம்படாராயின் தலைவனுடன் போய்விடுவர். தன் தோழியை வேறு ஒருவர்க்கு மணமுடிக்கக் கருதினர் பெற்றோர் என்பதை உணர்ந்த தோழி ஒருத்தி வருந்திக் கூறல் படித்து உணரத் தக்கது:

(i) “இவளைக் குளத்திலிருந்து காத்தவனுக்குக் கொடாது வேறொவற்குக் கொடுக்க நினைந்தமை அறமன்று. இங்ஙனம் அறம் அல்லாததைச் செய்வதால், இனி இம்மலை நாட்டில் கிழங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/97&oldid=1356852" இலிருந்து மீள்விக்கப்பட்டது