பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33

"கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனை தான் வள்ளலென்றேன்
இல்லாது சென்னேனுக்கு இல்லையென்றார்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின்றேனே!"

சிரிப்பொலி நின்றதும் இந்தப் பாட்டொலி வந்தது. கவிராயர் புனைந்துரைத்ததும், கஞ்சர்களான பிரபுக்கள் கையைவிரித்ததும் ஒன்றுமில்லாத வெற்று நிகழ்ச்சிகள்தாம். ஆனால் இவர் சமத்காரமாக'இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்’ எனத் துன்ப மிகுதியால் நெஞ்சு துடித்துப் புண்ணாக வேண்டிய நிலையில் புன்முறுவல் பூப்பதுதான் இலட்சியவாதிகள் சொந்த மனச் சமாதானத்தை அடையும் முறைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சாதாரணமானவர்களால் பாதிக்கப்படும்போது குறிக்கோள் கொண்ட இலட்சியமுடையவர்கள் பெரிய சாதனைகளால் அந்த வேதனைகளை வெல்வதில்லை. வெறும் சிரிப்பைக் கொண்டேகூட வென்று விடுகிறார்கள்.

12. அவரவர் திறமை

சோழன் கூறிய அந்தக் கருத்து ஒளவையாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “சிலர் சில செயல்களுக்காகவே தனித் திறமையுடன் பிறக்கிறார்கள். அவர்களைத் தவிர அந்தச் செயல்களை அதே திறமையுடன் செய்ய வேறு எவராலும் முடிவதில்லை."இதுதான் சோழன் கூற்று. தன்னுடைய சித்தாந்தத்திற்கு மேற்கோளாகச் சில துறைகளில் சிறந்த தனி ஆற்றல் பெற்ற சிலரையும் குறிப்பிட்டு நிரூபிக்க முயன்றான் சோழ

உபூ-3