பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழ் இலக்கியக் கதைகள்

அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்.”

அப்பு = கண்ணீர், தப்புதல் =துவைத்தல் - நீங்குதல், கலிங்கம் = ஆடை.

இதுதான் அவர் பாடிய பாட்டு, தாம் அடித்து அடித்துத் துவைப்பதற்காக ஆடை தம்மைப் பழி வாங்கி விட்டதாகக் கூறும் நயம் பாராட்டத்தக்கது.



27. சென்னையில் சிவகதி!

சோழ நாட்டில், அந்தக் காவிரிக் கரையில் வாழ்ந்த சுக வாழ்வைச் சென்னைப் பட்டினத்திலும் இராம கவிராயர் எதிர்பார்த்து ஏமாந்தால் அது சென்னையின் குற்றமா என்ன? தென்னை, மாந்தோப்புக்களின் அமைதியும், கால் காலாகப் பிரிந்து ஓடும் காவிரி நீரின் குளிர்ச்சியும், பச்சைப் பசேரென்ற பயிர் வெளியும், வெற்றிலைக் கொடிக்காலும், கரும்புத் தோட்டமும், வாழைக் கொல்லைகளுமாக விளங்கும் சோழ நாட்டுச் சிற்றுார் ஒன்றில் பிறந்து வளர்ந்து வாழ்பவர் அவர். ‘நிழலருமை வெய்யிலிலே’ என்றாற்போல ஊரிலிருந்தபோது தெரியாத அதன் அருமை சென்னைக்கு வந்து சில நாட்கள் கழிந்த அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியது அவருக்கு காரியார்த்தமாகச் சென்னை சென்று வரவேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முடியாமல் சென்னைக்கு வந்திருந்தார் அவர் வந்துவிட்டால், என்னதான் ஒத்துக் கொள்ளாத ஊராக இருந்தாலும் காரியத்தை முடித்துக் கொள்ளாமல் திரும்ப முடிகிறதா?

வந்த காரியமோ பட்டினத்து வீதிகளில் வெய்யிலையும் புழுதியையும் பாராமல் அவரை அலையவைத்து அலைக்