பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடப்பாடு

101

கடாவுதல்



கடப்பாடு = ஈகை, முறைமை, மிகுதல், கடமை, ஒப்புரவு
கடப்பாரை = இரும்புக்கருவி
கடமா = காட்டுப்பசு, யானை
கடமான் = காட்டுப்பசு
கடமுனி = அகத்தியன்
கடமை = கப்பம், கடன், பெண் ஆடு, முறைமை, காட்டுப் பசு, ஒரு வகையான மான்
கடம் = அரியவழி, உடல், முறைமை, பாலை நில வழி, கயிறு,கடன்,காடு, சுடலை, கோபம், மலைச்சாரல், கடமை, பாவம், யானை மதம், குடம், பாண்டம், யானைக் கதுப்பு
கடம்பவனம் = மதுரை
கடம்பன் = முருகன்
கடம்பாடவி = மதுரை
கடம்பு = தீங்கு, கடம்பம்
கடலகம் = ஊர்க்குருவி
கடல்வண்ணன் = திருமால்
கடவது = செய்ய வேண்டுவது
கடவநாள் = செல்லும் நாள்
கடவு = வழி, எருமைக்கடா
கடவுணதி = கங்கை
கடவுதல் = செலுத்துதல்,வினாவல்
கடவுள் = நன்மை, மேன்மை, குரு, முனிவன், தெய்வம்
கடவை = ஏணி, வழி, குற்றம், வாயில்
கடறு = காடு, சுரம், பாலை நிலம், மலைச்சாரல்
கடற்குட்டம் = கடல்சூழ்ந்த இடம்
கடனிறுத்தல் = கடன் தீர்த்தல், கடமை செய்தல்
கடன் = கடமை, இரவல், பொருள், குடி செலுத்தும் பொருள், முறைமை, இயல்பு, வைதிகக்கிரியை, விருந்தோம்பல், மானம்
கடன்மரம் = கப்பல்
கடன்மை = தன்மை
கடா = கேள்வி, தடை, யானை மதம்
கடாகம் = உலக உருண்டை, கொப்பரை
கடாகாசம் = குடத்தில் தோன்றும் ஆகாசம்
கடாசலம் = யானை
கடாட்சம் = கடைக்கண் பார்வை, கிருபை
கடாம் = யானைமதம்
கடாரம் = கொப்பரை, பர்மா தேசம், ஓர் ஊர்
கடாவுதல் = கேட்டல், குட்டுதல், விடுதல், தூண்டுதல், அறைதல், செலுத்துதல்