பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணேணி

106

கதிர்


கண்ணேணி = மூங்கில் ஏணி
கண்ணேறு = திருஷ்டி
கண்ணோடை யாட்டியார் = கள்விற்கும் மாதர்
கண்ணோடுதல் = விரும்புதல், இரங்குதல், பார்வையிடுதல்
கண்ணோட்டம் = தாட்சண்யம்
கண் படல் = தூக்கங் கொள்ளுதல்
கண்படை = தூக்கம், படுக்கை
கண் பாடு = தூக்கம்
கண்பு = சண்பங் கோரை
கண்மணி = உருத்திராக்கம், கண்ணுள் கருமணி
கண்மாறல் = புறங்கூறல், இடம் மாறுதல்
கண்மை = தாட்சண்யம், காட்சி
கண்வளர்தல் = தூங்குதல்
கதம் = கோபம், வேகம்,அடைந்தது, வலி ஓட்டம்
கதம்பம் = கூட்டம், கடப்ப மரம், வாசனைத் தூள், மேகம்
கதலல் = அசைதல்
கதலி = வாழை, காற்றாடி, துணிக்கொடி
கதலிகை = துணிக்கொடி
கதலிவனம் = திருக்கழுக்குன்றம்
கதலுதல் = அசைதல்
கதவம் = காவல்
கதவு = காவல்
கதழ் = வேகம்
கதழ்தல் = விரைதல், மிகுதல், ஓடுதல்
கதழ்வு = விரைவு, மிகுதி, உக்கிரம், ஒப்பு, கலக்கம்
கதனம் = கலக்கம், பேச்சு, வேகம், கடுமை
கதா மஞ்சரி = கதைக்கொத்து
கதி = நடை, நிலை, பதவி, பிறப்பு, புகல்இடம், மோட்சம், உபாயம், வழி, அறிவு, விரைவு சத்தி, படலம்
கதித்தல் = எழுச்சி, போதல், சொல்லல், பருத்தல், கோபித்தல், மிகுதல், அறிதல்
கதிமி = தலைமைக்குடியானவன்
கதிமை = பருமை
கதிரகம் = கீழ்த்திசை
கதிரம் = அம்பு
கதிரை = கதிர்காமம்
கதிர் = சூரிய சந்திரர், ஒளி, இரும்புமுள், கிரணம், வெயில், ஆர்