பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115



கல்லுதல்

கவான்


கல்லுதல் = தோண்டுதல், துருவுதல், அரித்தல்
கல்லை = தொன்னை, குமிழ், பொய், பிணக்கு
கல்லோலம் = நீர் அலை
கல்வளை = மலைக்குகை
கல்விக்களஞ்சியம் = கல்விக்கு இருப்பிடமாயுள்ளவன்
கல்வெட்டு = சிலாசாஸனம்
கவடி = பலகறை
கவடு=மரக்கொம்பு, பகுப்பு, யானை கழுத்திடு கயிறு
கவணை = கவண், மாட்டுக்குத்தீனி வைக்குமிடம்
கவண் = கல்எறி, கயிறு
கவந்தம்= நீர், பேய், உடற்குறை
கவந்தி = கோவணம், கந்தைகளாலான மெத்தைப்போர்வை
கவயமா = காட்டுபசு
கவயம் = காட்டுப்பசு, கவசம்
கவரி = எருமை, சாமரை, கவரிமா, தேர்
கவர் = இரண்டாகப்பிரிகை, வஞ்சகம், விருப்பு
கவர்தல் = விரும்புதல், முயங்கல், நுகர்தல், அகப்படுதல், அழைத்தல்
கவர்த்தல் = பிரிவு படுதல்
கவர்பு = வேறுபடுகை
கவர்வழி = பலவாகச் செல்லும் வழி
கவர்விடுதல் = கிளைவிடுதல்
கவலை = செந்தினை, மனத் துயர், மரக்கொம்பு, தோல் கூடை,
துன்பம், கபிலை, நாற்சந்தி, அக்கறை
கவல்=வருத்தம்
கவல்பு= கவலை
கவலல் = விரும்புதல்
கவவு= உள்ளீடு, முயக்கம், விருப்பம்
கவழம்= கவளம்
கவழிகை =திரைச்சீலை
கவளி= நூற்கட்டு
கவளிகை = வெற்றிலைக்கட்டு
கவளிகரித்தல் = விழுங்கல்
கவறாடல் = சூதாடல்
கவறு = சூதாடு கருவி, சூது
கவற்சி = வருத்தம்
கவனம் = வேகம், கருத்து, போர், காடு, வெப்பம், கலக்கம்
கவான் = துடை, குகை, கள்வன், மலைப்பக்கம், சாரல்