பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காடி

121

காதலன்



காடி = புளித்த நீர், கஞ்சி, கள், நெய், மூலை, ஊறுகாய், கழுத்து, பள்ளம், வண்டி
காடிகம் = சிலை
காடு = பாலை, மிகுதி, நெருக்கம், சுடுகாடு, வனம்
காடுகிழாள் = துர்க்கை
காடுபடுதிரவியம் = அரக்கு, கருந்தினை, தேன், புனுகு, மயிற்பீலி முதலியன
காட்சி = அற்புதம், தன்மை, பிரத்தியட்சம், தோற்றம், நூல், அழகு, காணல், அறிவு
காட்டம் = விறகு, வெண்கலம்
காட்டு = உதாரணம், காட்டுதல், செத்தை
காட்டை = எல்லை, திசை
காட்பு = வயிரம்
காணம் = கொள், செக்கு, பொற்காசு, திரவியம், நிலம்
காணார் = பகைவர்
காணி = உரிமை, ஒருநில அளவு, குழி
காணியாட்சி = உரிமைநிலம்
காணுதல் = வணங்குதல், பார்த்தல்
காண் = அழகு, காட்சி, ஆராய்ச்சி
காண்கை = அறிவு
காண்டம் = திரைச்சிலை, ஆயுதம், காடு, ஆபரணச் செப்பு, கமண்டலம், நீர், அம்பு, நூற்பெரும்பகுதி, கோல், குதிரை
காண்டலளவை = பிரத்தியட்ச பிரமாணம்
காண்டவன் = இந்திரன்
காண்டல் = ஆராய்தல், மதித்தல், புறங்காணல், பெறுதல், ஒத்திருத்தல், பொருந்தல், பலித்தல், போதியதாதல்
காண்டிகை = கருத்து, பதப்பொருள், உதாரணம் ஆகிய மூன்றுடன்
வரும் உரைவளம்
காண்டு = கோபம்
காண்டிவம் = அர்ச்சுனன் வில்
காண்தக = அழகுபொருந்த
காண்பு = காட்சி
காதகம் = கொலை
காதம்= கொலை
காதம்பம் = கானாங்கோழி, அன்னம்
காதம்பரீ = கள், பெண்மைனா
காதரம் = அச்சம், மறதி, அவலம், சஞ்சலம்
காதலன் = மகன், தோழன், அன்பன், கணவன்