பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காராம்பி

124

காலன்




  
காராம்பி = இறைகூடை
காராளர் = வேளாளர்
காரானன = யானை, மேகம்
காரான் = எருமை
காரி = ஐயனார், வயிரவன், கரிக்குருவி, கரிய ஏறு, கருநிறப் பொருள், ஒரு நாயனார், காக்கை, ஒரு நதி, சனி, விஷம், இந்திரன், வயிரவன், ஒரு வள்ளல் வாசுதேவன்
காரிகை = பெண், அழகு, யாப்பிலக்கண நூல்
காரியப் படல் = தொழிற்படல்
காரீடம் = உலர்ந்த சாணி
காரு = வண்ணான்
காருகத்தம் = இல்லற நிலை
காருகம் = இல்லறம், நெய்யும் தொழில்
காருகன் = வண்ணான், நெய்வோன், ஓவியன்
காருணி = வானம்பாடி
காருவாகன் = வண்ணான்
காருகம் = கருங்குரங்கு
காரேறு = இடி, எருமைக்கடா
காரை = ஆடை, ஒருவகை மீன்
கார் = எலி, இருள், செவ்வி, பசுமை, கார்காலம், கருங்குரங்கு, மேகம், கருமை, கார்நெல், மழை, வெள்ளாடு, குளிர்ச்சி, அறிவு, மயக்கம்
கார்கோள் = கடல்
கார்த்தபம் = கழுதை
கார்த்தல் = அரும்புதல், உறைத்தல்
கார்பார் = காரிய விசாரிப்பு
கார்ப்பு = காரம், கொடுமை, உவர்ப்பு
கார்முகம் = வில், மூங்கில்
கார்வண்ணன் = விஷ்ணு
காலகண்டன் = சிவன்
காலகாலன் = சிவன்
காலகூடம் = விஷம்
காலக்கிரமம் = நாளடைவு
காலசந்தி = வைகறை
கால சூத்திரம் = ஒரு நரகம்
காலசேயம் = மோர்
காலதர் = பலகணி, சன்னல்
காலத்திரயம் = முக்காலம்
காலநேமி = காலசக்கரம்
காலபாசர் = எமதூதர்
காலல் = ஒலி முதலியன வீசல்
காலன் = சனி, இயமன், இயமன் மந்திரி