பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிதியர்

126

காளிந்தி



காவிதியர் = பட்டம் பெற்றவர், கணக்கர், மந்திரிகள்
காவியம் = உறுதிப்பொருளைக் கூறும் கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுள்
காவிரிப்புதல்வர் = வேளாளர்
காவுதல் = இச்சித்தல்
காவுவோர் = பல்லக்குச் சுமப்போர்
கழகம் = ஆடை, கருமை, கடாரம், கைக்கவசம்
காழம் = ஒருவகையுடை
காழி = சீர்காழி, உறுதி
காழியர் = வண்ணார், பிட்டு வாணிகர்
காழூன்றுகடிகை = கூடாரம், குத்துக்கோல்
காழோர் = குத்துக்கோற்காரர், யானைப்பாகர்
காழ் = மணிக்கோவை, கட்டுத்தறி, சரம், பூமாலை, பரல்கல், குத்துக்கோல், ஒளி, புடவை, பளிங்கு, முத்துவடம், இரும்புக்கம்பி, மிகுதி, குற்றம், மரவயிரம் விதை, தூண், உறுதி, கருமை, ஓடத்தண்டு, இரத்தினம், முத்து, தடி, காம்பு
காழ்த்தல் = முற்றுதல், அளவு கடத்தல்
காழ்வை = அகில்
காழ்ப்பு = உரைப்பு, வயிரம், தழும்பு
காளகண்டம் = மயில், குயில்
காளகண்டன் = சிவன்
காளகம் = கருமை, எக்காளம்
காளகூடம் = விஷம், ஒரு நகரம்
காளபதம் = மாடப் புறா
காளமுகில் = கல் மழை பொழியும் மேகம்
காளமேகம் = கருமேகம், ஒரு புலவன்
காளம் = கருமை, மேகம், கழு, ஊதுகொம்பு, சிறு சின்னம், விஷம், பாம்பு, சூலம்
காளவனம் = சுடுகாடு
காளவாய் = கழுதை, சுண்ணாம்பு, செங்கல் சுட்டெடுக்கும் இடம்
காளாஞ்சி = எச்சிற்படிகம்
காளி = பார்வதி, கரியவள்
காளிங்கமர்தனன் = விஷ்ணு
காளிதம் = களிம்பு
காளித்தி = யமுனை நதி, வாகை, தேக்கு