பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காளிமம்

127

கான்றல்



காளிமம் = கறுப்பு, அஞ்ஞானம், களிம்பு
காளை = எருது, இளையோன், பாலை நிலத் தலைவன், வீரன்
காளையம் = போர் ஆரவாரம்
காறு = கொழு, கால அளவு
காறுபாறு = காரியவிசாரிப்பு
காறை = ஒரு கழுத்தணி
காற்கட்டு = கலியாணம்
காற்குளம் = பூச நாள்
காற்செறி = விலங்கு
காற்படை = கோழி, காலாட் படை
காற்பாசம் = பருத்தி
காற்புரவு = ஆற்றுப் பாய்ச்சல் நிலம்
காற்றுதல்= வெளிப்படுத்தல், அழித்தல்
காற்றுவாக்கு = காற்றடிக்கும் திசை
காற்றொழில் = முயற்சி
கானகநாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்
கானகம் = காடு, குறிஞ்சி நிலம்
கானத்தேறு = மஞ்சள்
கானநாடன் = முல்லை நிலத் தலைவன்
கானப்பேர் = காளையர் கோயில்
கானம் = காடு, கடற்கரைச் சோலை, மணம், முல்லை, தேர், நந்தவனம், பாலை , தொகுதி, இசை, மிகுதி
கானமா = காட்டுப்பன்றி
கானல் = உப்பளம், கடற்கரை, கடற்கரைச் சோலை, காங்கை, வெப்பம், ஒளி, பேய்த்தேர், கிரணம், கழி, மலைப்புறச்சோலை கழி
கானல்வரி = கழிக் கரைப் பாடல்
கானவன் = வேடன், குறிஞ்சி நிலத்தான், குரங்கு
கானவிருக்கம் = பாதிரிமரம்
கானனம் = காடு
கானெறி = சாளரம்
கான் = காடு, பூடு, வாசனை, அடர்த்தி, பூ, வாய்க்கால்
கான்மரம் = ஆலமரம்
கான்மாறுதல் = கழிந்து போதல்
கான்முளை = பிள்ளை, அனுமான்
கான்யாறு = முல்லை நில ஆறு
கான்றல்= வெளிப்படுத்தல், சிந்துதல், கக்குதல்