பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி





கிக்கிரி = மீன்குத்திப்பறவை
கிங்கரர் = தூதர், ஏவலாளர்
கிங்கிணி = செடி, சதங்கை
கிசலம், கிசலயம் = தளிர்
கிச்சு = நெருப்பு
கிஞ்சனன் = தரித்திரன், அறிவிலான்
கிஞ்சுகம் = கிளி, சிவப்பு, முள் முருக்கு, முருக்கு
கிடக்கை = உலகம், உள்ளுறுபொருள் படுக்கை, கட்டில், பரப்பு இடம்
கிடக்கிடு = கிடக்கட்டும்
கிடங்கர் = அகழி, கடல்
கிடங்கு = அகழி, குழி, சிறைச்சாலை, பொக்கிஷ வீடு
கிடாரம் =கொப்பரை
கிடி = பன்றி
கிடுகு = ஒரு பறை, கேடகம், சட்டப்பலகை முடைந்த ஒலைக் கீற்று, தேர்மரச் சுற்று, தட்டி
கிடை = உவமை, சடை, கிடக்கை, படுக்கை, பட்டி, ஆயுதம், பயிலிடம், உட்கிடை, வேதம் ஓதும் தானம், வேதக்கூட்டம்
கிட்டம் = அழுக்கு, வண்டல் மலம்
கிட்டலர் = பகைவர்
கிட்டி = தலையீற்றுப் பசு, கைத்தாளம், இடுக்குத் தடி, பன்றி, நாழிகை வட்டில்
கிட்டினம் = கறுப்பு
கிட்டினர் = உறவினர்
கிணை = உடுக்கை, மருதப்பறை, போர்ப்பறை
கீண்டுதல் = ஆராய்தல், அகழ்ந்தெடுத்தல், கிளறுதல்
கிண்ணாரம் = வீணை
கிந்தரம் = ஒருபட்சி, ஒரு யாழ்
கிம்புரி =தோள் அணி
கிம்புருடர் = குதிரை முகமும் மனித உடலும் உடைய சாதியார்
கிரகசாரம் = கிரக நடை
கிரகணம் = பிடித்தல், கிரகித்தல்
கிரணமாலி = சூரியன்
கிரணம் = ஒளி, கதிர்
கிரணன் = சூரியன்
கிரது = பலி, யாகம்