பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரந்தகர்த்தா

129

கிருபணன்



கிரந்தகர்த்தா = நூல் ஆசிரியன்
கிரந்தம் = நூல், வடமொழி
கிரமம் = ஒழுங்கு, முறைமை
கிரவுஞ்சம் = அன்றில், ஒரு தீவு, ஒரு மலை
கிராணம் = சிறு வட்டில், மூக்கு
கிராதன் = வேடன், கொடியவன், குறவன்
கிராமம் = நூறு குடியுள்ள ஊர், நீர்வாழ் பறவை
கிராமாந்தரம் = வேறு கிராமம்
கிராவணம் = கல்மலை
கிரி = பன்றி, மலை
கிரிசரம் = மலையானை
கிரிசன் = சிவன்
கிரிசை = பார்வதி
கிரிச்சம் = வருத்தம்
கிரிதுர்க்கம் = மலைக் கோட்டை
கிரியை = பூசை, தொழில், சடங்கு
கிரீசன் = சிவன்
கிரீடம் = முடி, வேலிப்பருத்தி
கிரீடி = அர்ச்சுனன்
கிரீடை = விளையாட்டு
கிரீதன் = விலைக்கு வாங்கிய பிள்ளை
கிரீவம் = கழுத்து, தலை
கிருகம் = வீடு, மனைவி
கிரகாச்சிரமம் = இல்வாழ்வு
கிருட்டி = பன்றி, பிரண்டை, தலையிற்றுப் பசு
கிருஷி = பயிர்செய்கை, பயிர்
கிருஷீகன் = வேளாளன், பயிர் செய்பவன்
கிருஷ்ணபக்கம் = தேய்பிறைப்பக்கம்
கிருஷ்ணம் = கறுப்பு, குயில் காகம், மான்
கிருஷ்ணன் = கண்ணன், அர்ச்சுனன்
கிருஷ்ணாஜினம் = மான் தோல்
கிருதம் = செய்கை, நெய், நீர், முதல் யுகம்
கிருதார்த்தன் = காரியசித்தி பெற்றவன், கருமம் முடித்தவன்
கிருதி = கீர்த்தனம், செய்கை
கிருது = யாகம்
கிருத்தி = தோல்
கிருத்திமம் = பொய், பூதம், செயற்கையானது
கிருத்தியம் = தொழில்
கிருத்திரிமம் = பொய், வஞ்சனை
கிருத்திவாசன் = சிவபெருமான்
கிருபணன் = உலோபி