பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136



குதிரை 136 கும்பசம்பவு,
 
குதிரை = குதிரை, கயிறு முறுக்கும் கருவி, யாழுறுப்பு, ஊர்க்குருவி, ஒரு மலை
குதூகலம் = விருப்பம், வில் குதை, சந்தோஷம்
குதை = முனை, அம்பு, பசி, அம்பின் அடி
குத்தல் = தின்னல், தைத்தல்
குத்தி = அடக்கம், மண், மாறுபாடு, கலப்பைக்கூர்
குத்திரம் = மலை, குரூரம், வஞ்சகம்
குத்திரம் = வஞ்சகம், இழிவு, சணல்
குந்தகம்= குழப்பம், தடை
குந்தம் = ஈட்டி, குதிரை, குருந்தமரம், கைவேல், குத்துக்கோல்
குந்தளம் = கூந்தல், ஒருநாடு
குந்தன் = திருமால், தூயன்
குந்தாணி = பரு உரல், உலக்கை
குந்தாலி = கணிச்சி, கிணறு தோண்டும் கருவி
குந்தி = கள், பஞ்சபாண்டவர் தாய், சிட்டுக்குருவி
குந்திருக்கம் = குங்குலியம்
குபதம் = தீ நடை, பாழ் வழி
குபிதன் = கோபி
குபேரன் = சந்திரன், குபேரன்
குப்பம் = கடற்கரையூர், ஊர் காடு, கூட்டம்
குப்பாயம் = சட்டை
குமண்டை= மகிழ்ச்சிக் கூத்து, செருக்கிய செயல்
குப்புறுதல் = மை, கன்னி, ஒர் ஆறு, ஒரு தீர்த்தம்
குமரகோட்டம் = காஞ்சிபுர முருகன் கோவில்
குமரம் =கொம்பில்லா மிருகம்
குமரி = அழிவின்மை, கற்றாழை, காளி, கன்னி, மகள், உமை, ஒரு நதி
குமரிச்சேர்ப்பன் = பாண்டியன்
குமரியிருட்டு = விடி முன் உள்ள இருள்
குமிலம் = பேரொலி
குமுதம் = தருப்பை, அடுப்பு, படைவகை, பேரொலி, ஆம்பல் மலர்
குமைதல் = அழிதல், குழைதல், புழுங்கல்
கும்பகாரன் = குயவன்
கும்பசம்பவன் = அகத்தியன், துரோணன்