பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137



கும்பசன் = அகத்தியன்
கும்பமுனி = அகத்தியன்
கும்பம் = குடம், குவியல், நெற்றி, யானை மத்தகம், நூறுகோடி
கும்பளம் = பூசனி
கும்மன் = அகத்தியன்
கும்பி = சேறு, யானை வயறு
கும்மட்டம் = கோவில் ஸ்தூபி
கும்மலித்தல் = விளையாடுதல்
கும்மாயம் = குழம்பு, சுண்ணாம்பு, ஒருவகைச் சிற்றுண்டி
குயம் = முலை, அரிவாள், இளமை, கத்தி, தர்ப்பை
குயவரி = புலி
குயவு = தேர்
குயா = கோங்கு
குயிலுதல் = அழுத்துதல், செய்தல், செல்லல்
குயில்=சொல், துளை, ஒரு பறவை
குயின் = மேகம்
குயுக்தி = பரிகாசம், துர்ப்புத்தி
குய் = தாளிப்பு, நறும்புகை, சாம்பிராணி
குய்யம் = மறைவு, வஞ்சகம்
குரகதம் = குதிரை
குரங்கம் = மான், மிருகம்
குரங்குதல் = வளைதல்,தொங்குதல், தாழ்தல், வணங்கல், குறைதல்
குரண்டம் = கொக்கு
குரம் = குளம்பு, பசு
குரம்பு = வரம்பு, செய்கரை, எல்லை
குரம்பை = உடல், வீடு, குடில், கூடு, முட்டை, நெற்கூடு, குடிசை
குரல் = இறகு, ஒலி, கழுத்து, யாழ் நரம்பு, பூங்கொத்து, தோகை, மொழி, கூந்தல், பயிர்க்கதிர், உடல் , கிண்கிணிமாலை
குரல்வளை = கழுத்து
குரவம் = நறுமணம், குரா, பேர்‌ ஈந்து
குரவன் = பெரியோன், குரு, ஆசிரியன், கடவுள்
குரவு = நறுமணம், குராமரம், ஆசிரியத்தன்மை
குரவை= ஒலி, கடல், எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் கூத்து, மகளிர் மகிழ்ச்சி, ஒலி
குரால் = பசு, கபில நிறப்பசு, கோட்டான்
குரிசில் = தலைவன், பெருமையிற் சிறந்தவன்
குரீஇ= குருவி