பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தரம்

11

அபாம்பதி


அந்தரம் = ஆகாயம், இருள், தனிமை, தீமை, நடு, வான், முடிவு, ஒப்பு, பேதம், வேறுபாடு, அளவு, கோவில்
அந்தராளம் = மூலட்டானத்தை அடுத்த மண்டபம்
அந்தரர் = தேவர்
அந்தரி = பார்வதி, ஆகாயவாணி, ஒரு தோல் கருவி
அந்தரியாமி = ஆன்மா, கடவுள்
அந்தர்த்தானம் = மறைவு
அந்தளம் = கவசம்
அந்தளி = தேவர் கோவில்
அந்தன் = அழகன், குருடன், சனி, இயமன், அறிவிலான், கடுக்காய்
அந்தாதி = நின்ற பாட்டின் இறுதியும் வரும்பாட்டின் முதலும் ஒன்றாய் வருவது
அந்தி = முத்தெருக் கூடும் இடம், மாலைக்காலம், இரா, அதிகாலை
அந்தியேட்டி = ஈமக்கடன்
அந்திரன் = தேவன்
அந்தில் = அவ்விடம், வெண்கடுகு
அந்திவண்னன் = சிவன்
அந்து = நெல்வண்டு
அந்தப்பிராசனம் = குழந்தைக்கு முதலில் சோறுட்டும் சடங்கு
அந்நியோந்தியம் = ஒற்றுமை
அபசவ்வியம் = வலப்பக்கம், மாறுபாடு
அபத்தம் = பொய், தவறு
அபமிருத்து = நோய் முதலிய காரணமில்லாத மரணம்
அபயம் = அடைக்கலம், அச்சமில்லாமை
அபயன் = சோழன், சூரன்
அபயகத்தம் = பயம் தீர வைக்கும் கை
அபரகாத்திரம் = கால்
அபரஞ்சி = புடமிட்ட பொன்
அபரம் = பின், கீழ், மேற்கு, பொய், கவசம், நரகம்
அபராங்கம் = உடம்பின் பிற்பகுதி
அபராசிதன் = சிவன், விஷ்ணு, வெல்லப்படாதவன்
அபரோட்சம் = அநுபவ அறிவு, கண் கூடு
அபலை = மாது
அபவருக்கம் = மோட்சம்
அபாங்கம் = கடைக்கண்
அபாம்பதி = வருணன்