பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைத்தாய்

147

கைனி




கைத்தாய் = செவிலித்தாய்
கைத்து = பொன், பொருள், வெறுப்பு
கைத்தூண் = பிறர் கையால் உண்ணல்
கைந்தலை = விதவை
கைந்நொடித்தல் = விரலை நொடித்தல்
கைப்பரிசு = சிறு தெப்பம்
கைபுனைதல் = அலங்கரித்தல்
கைப்பு = கசப்பு, வாதம், வெறுப்பு
கைம்பெண் = விதவை
கைம்மலை = யானை
கைம்மாறு = பதில் உதவி
கைம்மான் = யானை
கைம்மிகல் = ஒழுக்கக்கேடு, அதிகப்படல், கை கடத்தல்
கைம்மை = சிறுமை, கைம்பெண், அறியாமை
கையடை = அடைக்கலம்
கையமைத்தல் = அபயங் கொடுத்தல்
கையயர்தல் = சோர்தல்
கையரி = தேடுதல்
கையர் = கீழ்மக்கள், மூடர், வஞ்சகர், அஞ்ஞானிகள்
கையறம் = வசைக்கவி, இரங்கற்பா
கையறவு = வருத்தம், செயலற்றது, தரித்திரம், மரணம்
கையறுதல் = சாதல், செயல், அறுதல்
கையறுநிலை = இரங்கற்பா, இறந்தவர்க்காக மற்றவர்
வருந்துதல
கையறை = உதவியின்மை, செயல் இன்மை
கையாறு = துன்பம், ஒழுக்கநெறி, செயலொழிந்தயர்தல்
கையிகத்தல் = மிகுதல், மீறுதல், கடத்தல், இழத்தல்
கையுறல் = அகப்படல்
கையுறை = காணிக்கை, கைக்கவசம்
கையை = தங்கை
கைரவம் = குமுதம், வெள்ளாம்பல்
கைரிகம் = பொன், காவிக்கல்
கைவலம் = மோட்சம்
கைவல்லியம் = மோட்சம், அனுகூலம், தனிமை
கைவழி = யாழ்
கை வாரிகள் = அரசசபையில் வாழ்த்துக்கூறுவோர்
கைவிலங்கு = யானை
கைனி = விதவை, அஸ்தநாள்