பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158


சகமார்க்கம் = யோகவழி சகம் = உலகம்,வெள்ளாடு, பாம்புச் சட்டை சகலகலாவல்லி = சரஸ்வதி சகலகுணசம்பன்னன் = பல நற்குணம் உள்ளவன் சகலர் = ஆணவம், கன்மம் மாயை ஆகிய மும்மலமுடைய ஆன்மாக்கள் சகவாசம் = கூட இருத்தல், சினேகம் சகவாழ்வு = உலகவாழ்வு சகளம் = உருவம் சகளீகரித்தல் = உருவம் கொள்ளுதல் சகனம் = ஆதனம் சகன் = நண்பன், தோழன், சாலிவாகனன் சகாப்தம் = சாலிவாகனன் ஆண்டு சகி = தோழி, தோழன் சகிதம் = கூடியிருத்தல் சகுடம் = நாய் சகுந்தம் = பறவை, கழுகு சகுலி = கொழுக்கொட்டை, அப்பவகை சகுனம் = கிழங்கு, நிமித்தம், ஒருபறவை சகோடம் = 16 நரம்புடைய ஒருயாழ் சகோரம் = நிலவின் ஒளியை உண்ணும் பறவை, பேர் ஆந்தை சக்கரபாணி = திருமால் சக்கரம் = பூமி, பெருமை, தேர்உருளை, சக்கரவாகப் பறவை, செக்கு, வட்டம், ::அரசு, திரிகை சக்கரவாகம் = ஒரு வகைப் பறவை சக்கரவாளம் = ஒருமலை சக்கரன் = இந்திரன், திருமால் சக்காரம் = தேமா சக்கிரதரன் = திருமால் சக்கிரி = அரசன், குயவன், திருமால், பாம்பு, தேர், தேவேந்திரன் சக்கு = கண் சக்கை = பலாக்காய், கோது சங்கக்குழையோன் = சிவன் சங்கதம் = வடமொழி சங்கதி = தொடர்பு, வரலாறு சங்கநிதி = குபேரனது நிதிகளுள் ஒன்று, சங்கு வடிவாய் அமைந்தது. சங்கபாணி = திருமால் சங்கமம் = இயங்கு திணை பொருள், கலத்தல், கூடுதல், சிவனடியார் திருக்கூட்டம்