பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமைத்தல்

165

சயமடந்தை



சமைத்தல் = உண்டாக்கல்
சம்சயம் = சந்தேகம்
சம்சர்க்கம் = ஒற்றுமை, சேர்தல்
சமஸ்காரம் = மந்திரத்தினால் சுத்தம் செய்யும் சடங்கு
சம்படம் = சீலை
சம்பந்தம் = திருமணம், தொடர்பு
சம்பம் = இடி, வச்சிராயுதம்
சம்பரசூதனன் = மன்மதன்
சம்பரம் = நீர், மேகம், மேன்மை, ஒருபறவை, மருதமரம்
சம்பராரி = மன்மதன்
சம்பர்க்கம் = கலப்பு
சம்பவம் = பிறப்பு, நிகழ்ச்சி, காரணம்
சம்பன்னன் = நிறைவுள்ளவன்
சம்பாரம் = கூட்டுவர்க்கம்
சம்பாவனை = வெகுமானம், மரியாதை
சம்பான் = படகு
சம்பிரதம் = சித்து, விளைவு, மாயம்
சம்பிரதாயம் = உபாயம், சாதுரியம், பரம்பரை, விதி
சம்பிரமம் = திருப்தி, வேகம், இடம்பம், விரைவு, பரபரப்பு, மகிழ்ச்சி
சம்பிரேட்சியம் = ஆராய்ந்தறிதல்
சம்பு = சிவன், விஷ்ணு, பிரமன், நாவல், சுகந்தருபவன்
சம்புகம் = நரி
சம்புடம் = புத்தகப்பகுதி
சம்புரோட்சணம் = தெளித்தல்
சம்பூரணம் = நிறைவு
சம்பை = மின்னல்
சம்மட்டி = சவுக்கு, கொல்லன் கூடம்
சம்மேளனம் = கூடுதல்
சம்யுக்தம் = கூடியிருத்தல்
சம்யோகம் = கூடுதல்
சம்ரட்சணம் = காத்தல்
சம்ராட்டு = சக்ரவர்த்தி
சம்வர்த்தகம் = மணிகளைப் பொழியும் மேகம்
சம்வற்சரம் = வருஷம்
சம்வாகம் = ஊர்
சம்வாதம் = தர்க்கம்
சய = போற்றி
சயகண்டி = பெரிய வட்டமான மணி
சயத்தனம் = தேர்
சயத்தன் = இந்திரகுமாரன், சந்திரன்
சயமகள் = துர்க்கை, வீரலட்சுமி
சயமடந்தை = துர்க்கை, வீரலட்சுமி