பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சரிதை

167

சலாபம்



       
சரிதை = ஒழுக்கம், கதை
சரியை = ஒழுக்கம்
சருகு = உலர்ந்த இலை
சருக்கம் = படலம்
சருச்சரை = சொரசொரப்பு
சருமம் = தோல், பரிசை, கேடகம்
சருவசங்க பரித்தியாகம் = முற்றும் துறத்தல்
சருவாட்சி = கடவுள், சூரியன்
சருவஞ்ஞத்துவம் = எல்லாவற்றையும் அறியும் தன்மை
சருவரி = இருள், சூரியன்
சருவாணி = பார்வதி
சருவாந்தரியாமி = எங்கும் நிறை கடவுள்
சருவுதல் = கிட்டுதல், மருவுதல், பழகுதல்
சரை = நரை, கிழத்தன்மை
சரோருகம் = தாமரை
சரோவரம் = தடாகம்
சர்ச்சை = ஆராய்ச்சி, வாதம்
சர்ப்ப = விரைவாக
சர்ப்பனை = வஞ்சகம்
சர்மம் = தோல்
சர்வன் = சிவன்
சலகாமி = நீர்மேல் நடக்கும் குதிரை
சலகை = தெப்பம்
சலசம் = தாமரை, முத்து, பாசி
சலசரம் = முதலை, மின், படகு
சலசலோசனன் = விஷ்ணு
சலசை = இலக்குமி
சலஞ்சலம் = வலம்புரி சங்கு
சலதம் = மேகம்
சலதரம் = குளம், கடல், மேகம்
சலதி = சமுத்திரம், பொய் கூறுவோன்
சலநிதி = சமுத்திரம்
சலபதி = வருணன்
சலபம் = விட்டிற்பறவை
சலம் = அசைவு, மாறுபாடு, பட்சபாதம், பொய், வஞ்சகம், நடுக்கம், வெறுப்பு, நீர், கோபம், தீச்சொல், பிடிவாதம், துக்கம்
சலராசி = கடல்
சலவர் = பகைவர், வஞ்சகர், நெய்தல் நிலத்தவர்
சலவியன் = கோபம் உள்ளவன்
சலனம் = அசைவு, காற்று, போதல், கால்
சலாகை = சட்டி, நாராசம், முள், ஊசிக்காந்தம், வாகுவலயம்
சலாசயம் = நீர் நிலை
சலாபம் = முத்துக்குளித்தல்