பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176





சிதி = கறுப்பு
சிதிகண்டன் = சிவன்
சிதிரம் = வாள், தீ, கோடரி
சிதை = ஈமவிறகு, கப்பல் பாய், இழிசொல், வெண்துளசி
சித்தசன் = மன்மதன்
சித்தப்பிரமை = பைத்தியம், மனமயக்கம்
சித்தம் = நித்தியம், உறுதி, மனம், திண்மை
சித்தர் = முனிவர்
சித்தலயம் = மன ஒடுக்கம்
சித்தன் = சிவன், வயிரவன், முருகன், அருகன், வியாழன்
சித்தாந்தம் = முடிந்த முடிவு, சுத்தாத்துவிதசைவ சமயம்
சித்தாந்தி = தருக்க முடிவு கூறுபவன், கணிதன்
சித்தி = அறிவு, மோட்சம்
சித்திநெறி = மோட்ச மார்க்கம்
சித்தியர் = தெய்வமங்கையர்
சித்திரகம் = பொட்டு
சித்திரகாயம் = புலி
சித்திரகுத்தன் = யமன் கணக்கன்
சித்திரகூடம் = ஒருமலை
சித்திரபானு = சூரியன்
சித்திரம் = அதிசயம், புலி, ஆதாயம், பொட்டு, வெளி, பல்நிறம், அசோகு, கலகம், நிந்தை, மெய்யென எண்ணும்படி பேசப்படும் பொய், பேரழகு, இரகசியம், குறைவு
சித்தினி = ஒருவகைப்பெண்
சித்= அறிவு
சித்து = அறிவு, பொருள், ஆன்மா, மாயம்
சித்துப்பொருள் = அறிவு மயமான பொருள்
சித்தை = தோல் துருத்தி
சித்தகம் = புளியமரம்
சிந்தம் = கொடி, புளியமரம்
சிந்தனை = துயரம், கவலை, ஆராய்தல், எண்ணம், தியானம்
சிந்தாகுலம் = மனத்துயர்
சிந்தாமணி = எண்ணியதை எண்ணியபடி ஈயவல்ல தெய்வீகமணி
சிந்தினர் = குள்ளர்
சிந்து = ஆறு, கடல், நீர், முச்சீர் கொண்ட பாடலின் அடி, ஒரு வகைப்பா, ஒரு தேசம், கொடி
சிந்தூரம் = சிவப்பு, பொட்டு, புளியமரம், செஞ்சுண்ணம் , யானை
சிந்துவாரம் = வெண்ணொச்சி, கருநொச்சி