பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177



சிந்தை = எண்ணம், மனம், மனவருத்தம் சிபுகம் = மேவாய் சிமயம் = மலை, மலையுச்சி சிமாளம் = மகிழ்வு சிமிட்டுதல் = வஞ்சித்தல் சிமிலி = குடுமி, தோணி, எள்ளுருண்டை, சிள்வீடு, உறி சிமிழ் = செப்பு சிமிழ்த்தல் = கட்டல், பிடித்தல், கண்மூடல் சிமிழ்ப்பு = பந்தம் சிமை = குடுமி, மலையுச்சி சிம்புளித்தல் = கண்மூடுதல் சிம்புள் = சாபம் சிம்பை = அவரைக்கொடி சிம்மாளம் = மகிழ்ச்சி சிரகம்= கிரகம் சிரக்கம்பம் = தலையசைப்பு சிரங்கை = கைக்கொண்ட அளவு சிரஞ்சீவி = பொன், காகம், இலவமரம், நீண்டகாலம் வாழ்பவன் சிரட்டை= கொட்டாங்கச்சி சிரத்தை = விருப்பம், அன்பு சிரபங்கம் = தலைச்சேதம் சிரமம் = சிலம்பம், வருத்தம், இளைப்பு சிரம் = நெடுங்காலம், தலை சிரல் = மீன்குத்திப்பறவை, முடிவிடம் சிரவணம் = காது, கேள்வி, திருவோணம் சிரவம் = காது, கீர்த்தி, கவுதாரி, சிரறுதல் = மாறுபடுதல், சிதறுதல் சிரற்றுதல் = கோபித்தல் சிரற்றல் = ஒலித்தல் சிராந்தி = இளைப்பு சிராவணம் = ஆவணிமாதம், புதுப் பூணல் அணிதல், கல், இடுக்கி சிரீ = இலக்குமி, ஶ்ரீ சிரீவற்சம் = ஒரு குதிரை, விஷ்ணு மார்பின் மறு சிருகாலன் = நரி சிருக்கு = யாகக்கரண்டி சிருங்கம் = மலை முடி, விலங்கின் கொம்பு சிருங்கலம் = சங்கிலி சிருங்கலை = விலங்கு, யானையைக் கட்டும் காற் சங்கிலி சிருங்கி = ஒரு மருந்து, ஒரு சுவை, சுக்கு, பொன் சிருட்டிகர்த்தா = பிரமன், கடவுள் சிரேட்டம் = முதன்மை சிரேணி = இடையர் வீதி, வரிசை