பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178



சிரேயசு = கீர்த்தி சிரை = நரம்பு, குரங்கு சிரோத்திரம் = காது சிரோருகம் = தலைமயிர் சிரெளதம் = வேதம் விதித்தது சிலகம் = அகப்பை சிலதன் = தோழன், வேலையாள் சிலதி = தோழி சிலந்தி = சிலந்தி, கொப்புளம் சிலம்பம் = படைக்கலப் பயிற்சி சிலம்பன் = குறிஞ்சி நிலத்தலைவன், முருகன் சிலம்பு = மலை, ஒலி, காற்சிலம்பு சிலாசாஸனம் = கல்வெட்டு சிலாதலம் = கற்படி, பாறை சிலாவட்டம் = சாணைக்கல் சிலாவர்ஷம் = கல்மழை சிலீமுகம் = அம்பு, வண்டு, போர் சிலுகு = குற்றம், துன்பம், குழப்பம் சிலேடை = ஒருசொல்லோ ஒரு தொடரோ இரு பொருள்பட இருப்பதும் பல பொருள் அமைய இருப்பதும் ஆகும் சிலேட்டுமம் = கோழை சிலை = ஒலி, வில், மார்கழி, மாதம், கல், மலை, வால், கல்லுருவம், ஒளி சிலைத்தல் = ஒலித்தல், கோபித்தல், இடைதல் சிலோச்சயம் = மலை சில் = வட்டமானது, தேர் உருளை, அற்பம் சில்காற்று = தென்றல் சில்மிஷம் = குறும்பு சில்லி = தேர் உருளை, வட்டம், சிறுகீரை, ஓட்டை சில்லு = ஓடு சில்லை = பழிச்சொல், தேருருள், நீர்பறவை, சிள்வண்டு சிவகதி = மோட்சம் சிவசத்தி = சிவனை நீங்காத சத்தி சிவஞானம் = பதி அறிவு, தெய்வ அறிவு சிவணுதல் = பொருந்தல், ஒத்தல், கிட்டல், கலத்தல் சிவத்தல் = கோபித்தல், சிவத்தல் சிவபுரம் = காசி, சிவலோகம் சிவப்பு = கோபக்குறி சிவமயம் = மங்களகரம் சிவம் = நன்மை, சுகம், மங்கலவிதி, நீர் முத்தி, வேதம் சிவல் = கவுதாரி