பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு



சு = நன்மை, சுகம், மங்கலம், சொந்தம்
சுகதம் = ஒரு பௌத்த நூல்
சுகதன் = அருகன், புத்தன்
சுகந்தம் = நறுமணம்
சுகம் = கிளி, இணக்கம், இன்பம்
சுகாதீதம் = மோட்சம்
சுகிர்தம் = நன்மை, நற்செயல், இன்பம்
சுகிர்தல் = கிழித்தல், வடித்தல், வகிர்தல், பஞ்சு, எஃகுதல்
சுகிர்த்து = நட்பு,
சுகிர்ல்லாபம் = நட்பைப் பெறுதல்
சுகுமாரம் = மென்மை
சுகுச்சை = அருவருப்பு
சுக்கான்கல் = சுண்ணாம்பு கல்
சுக்கிரன் = தீ, வெள்ளி
சுக்கிலபட்சம் = வளர்பிறை பக்கம்
சுக்கிலம் = வெண்மை, இந்திரியம்
சுக்கை = மாலை, நட்சத்திரம்
சுங்கன் = சுக்கிரன்
சுகி = கோடைக்காலம், சந்திரன், நெருப்பு, சுத்தம், வெண்மை
சுசிரம் = துளை
சுசீலம் = நற்குணம், நேர்மை
சுசுருஷை = பணிவிடை
சுசுந்தரி = மூஞ்சூறு
சுடரோன் = சூரியன்
சுடர் = அக்கினி, ஒளி, சந்திரன், சூரியன், விளக்கு, நெருப்பு
சுடலை = சுடுகாடு
சுடலையாடி = சிவன்
சுடிகை = உச்சி, தலை, கிரீடம், சுட்டி
சுடுமண் = செங்கல், ஓடு
சுடுவன் = இரத்தம்
சுட்டி = நெற்றியணி, சுழி, நாக்கு
சுட்டிகை = மாதர் நெற்றியணி
சுட்டு = குறிப்பு, மதிப்பு, புகழ்
சுணங்கன் = நாய்
சுணங்கு = தேமல், பூந்தாது, மெலிவு