பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுணம்

183

சுமாரகம்


சுணம் = சுண்ணப்பொடி, அழகுதேமல் சுணை = கூா்மை, சுரணை, அறிவு, தினவு, இலைச்சாெறி சுண்டன் = மூஞ்ஞறு, சதயநாள் சுண்டம் = கள், யானைத் துதி்க்கை சுண்டாலி = யானை சுண்டி = கள், சுக்கு சுண்டை = கள், யானைக் கை சுண்ணப்பாெடி = வாசனைப்பாெடி, மகரந்தம் சுண்ணம் = சுண்ணாம்பு, பாெடி, மலா், பட்டுவகை சுதகம் = குறைவு சுகம் = கேடு, சுருதியறிவு, முறைமை சுதாிசனம் = கண்ணாடி, திருமால், சக்கரம், அழகு சுதனம் = நற்பாக்கியம் சுதன் = மகன் சுதன்மை = இந்திர சபை சுதாகரன் = கருடன், சந்திரன் சுதி = இசை, சுருதி சுதினம் = நல்ல தினம் சுதை = உதைகால்பசு,வெண்மை, நீர், அமிழ்து, சுண்ணாம்பு, மகள், கேடு சுத்தம் = முழுமை, துாய்மை சுத்தாத்துவைதம் = உயிா் இறைவனுடன் இரண்டறக்கலந்து அனுபவிக்கும் நிலை சுத்தி = சங்கு, கிளிஞ்சில் சுத்தோதகம் = தூயநீர் சுந்தரம் = அழகு, நன்மை, சிந்துாரம், நிறம் சுந்தாி = பார்வதி, இந்திராணி, பெண், அழகு சுந்தரேசன் = சிவன் சுந்து = நீா் சுபட்சம் = தன் கொள்கை சுபமஸ்து = மங்கலச்சொல் சுபன்னன் = கருடன் சுபாசுபம் = நன்மை, தீமை சுப்பிரதீபம் = நல்ல உறுப்புகளையுடையது, வடகீழ்த்திசை யானை சுப்பிரம் = ஒளி, சந்தனம், துய்மை, வெண்மை, வெள்ளி சுமடர் = கிழ்மக்கள், அறிவிலார் சுமதி = நன்மதி, பாரம் சுமத்தல் = பணிதல், தாங்குதல், மிகுதல் சுமம் = பூ சுமனசம் = பூ, கோதுமை சுமனை = சிவப்புப் பசு சுமாரகம் = நினைப்பு