பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுரும்பு

185

சுவாசம்


சுரும்பு = வண்டு, மலை சுருவம் = யாகநெய்த்துடுப்பு சுரேசன் = இந்திரன் சுரேசுவரி = உமை சுரை = குழாய், உள்துளை. சுரைக்கொடி, தேன், பூண்,பசுவின்மடி, பொய், மூட்டுவாய், அமுதம், களவு சுரோணிதம் = இரத்தம் சுராேதா = கேட்கிறவன் சுரோத்திரம் = கேள்வி, காது சுரோத்திரியம் = வேதம் கற்றவர்க்குக் கொடுக்கப் பட்ட பூமி சுலநன் - அக்கினி சுலவுதல் = சுழலுதல், சூழ்தல் சுலாவு - காற்று சுலோகம் = புகழ், ஆரியச்செய்யுள், பழமொழி சுலோகி = கள் சுலோசனம் = நல்லகண், மூக்குக்கண்ணாடி சுல்கம் = மணமகள்,விலைப்பொருள் சுல்லி = அடுப்பு சுல்வம் = தாமிரம் சுவ = தனது சுவச்சம் = அழுக்கின்மை சுவடி = எழுதிய புத்தகம் சுவடித்தல் = தின்னுதல், அலங்கரித்தல் சுவடு - தழும்பு, வண்டிபாதை, அடையாளம் சுவணகாரர் = தட்டார் சுவணம் = கருடன், கழுகு, பாென் சுவத்தம் = சுகம் சுவஸ்தி = ஒரு மங்கலமாெழி சுவஸ்திகம் = ஒா் ஆசனம் சுவப்பிரம் = நரகம், பாதாளம் சுவம் = சொத்து சுவா் = அலங்காரம், உச்சஒலி, தேருறுப்பு, மதில் சுவா்க்கலாேகம் = விண்ணுலகம் சுவர்ணம் = பாென், நன்னிறம் சுவலை = அரசமரம் சுவல் = தோள்மேல், மேடு, பிடர், முதுகு, பயிர், மெட்டு நிலம், மேலிடம், குதிரையின் கழுத்து மயிர் சுலவு = மூஞ்சூறு, பறவை மூக்கு சுவனம் = சொப்பனம் சுவாகதம் = கிளி, நல்வரவு சுவாகாதேவி = அக்கினி மனையாள் சுவாசகம் = கிளி

சுவாசம் = நல்மணம், நல்இருப்பிடம்

24