பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவாசினி

186

சுன்னம்


சுவாசினி = சுமங்கலை சுவாது = தித்திப்பு சுவாஸ்தியம் = சுகம், இன்பம் சுவாநுபவம் = தன்னிடம் உண்டான அனுபவம் சுவாமி = பொன், தேவன், குரு, அரசன், கடவுள் சுவாமிநாதன் = சுப்ரமணியன் சுவார்ச்சிதம் = தானே சம்பாதித்த பொருள் சுவானம் = நாய் சுவானுபூதி = தெய்வ அறிவு சுவிகரித்தல் = தனதாக்கல் சுவிகாரம் = அங்கீகரித்தல் சுவிகை = கள் சுவேகம் = உறை சுவேதசம் = வேர்வையில் பிறப்பவை சுவேதம் = வெண்மை, வேர்வை சுவேதவனம் = திருவெண்காடு சுவேதவாகனன் = அர்ச்சுனன் சுழல் = காற்றாடி, வளைவு, சுழல்வு, சஞ்சலம் சுழல்படை = வளைதடி சுழி = கபடம், மூர்க்கம், சுழி, கடல் சுழிமுனை = நடுநாடி சுழியல் = மயிர், சுருள் சுழியன் = சுழல்காற்று, வஞ்சகன் சுழுத்தி = நல்லுறக்கம், புலன்கள் செயலற்றநிலை சுழுமுனை = இடைநாடி, இடைபிங்கலை சுளகு = முறம் சுளிப்பு = குறிப்பு சுளுந்து = சபதம் சுள் = உலர்ந்த மீன், சிறுமை சுள்ளாப்பு = உறைப்பு விளைவு, அடி, பழிச்சாெல் சுள்ளி = அனிச்சமரம், மாமரம், சுள்ளி, ஆச்சாமரம், கொன்றை, தேன் சுற்றுப்படாகை = அயல் கிராமம் சுனகன் = நாய் சுனை = நீா்மலையூற்று, நிலைதினை சுனைதல் = வாடுதல் சுன்னம் = சுழி, சுண்ணாம்பு