பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192


செயல் 192 செல்லல்
செயல் = ஒழுக்கம், வலிமை, நிலைமை, தொழில், பொருள்தேடுகை, காவல்
செயிரியர் = வீணை முதலிய இசைக்கருவிகளை இயக்குபவர், பாணர்
செயிர் = குற்றம், கோபம், துன்பம், போர், நோய், வருந்துதல்
செயிர்ப்பு =கோபம், குற்றம்
செய் = வயல், செய்கை
செய்கால் = சாகுபடி நிலம்
செய்கை = வேளாண்மை, வேலைப்பாடு, ஒழுக்கம்
செய்தல் = ஒத்தல், இயற்றுதல், சம்பாதித்தல்
செய்தி = நன்றி, செய்கை, இயல்பு, காரியம், சங்கதி, ஒழுக்கம்
செய்ய = அழகிய, சிவந்த
செய்யல் = சேறு, ஒழுக்கம்,காவல், செய்தல்
செய்யவள் = இலக்குமி
செய்யன் = சிவன்
செய்யாமொழி = வேதம்
செய்யார் = பகைவர்
செய்யாள் = இலக்குமி
செய்யுள் = விளைகநிலம், பாட்டு, காவியம்
செரு = போர், ஊடல்
செருக்கம் = மாதுளை, கள் மயக்கம்
செருக்கு = கர்வம், பெருக்கம், களிப்பு
செருத்தணி = திருத்தணிகை மலை
செருத்தல் = எருமைமடி, பசுமடி
செருநர் = பகைவர், படை விரர்
செருந்தி = கோரைப்புல்
செருந்து = இதழ்
செருமல் = செருகல்
செருமுதல் = இருமுதல், விக்குதல், அடைசுதல், நெருக்குதல்
செருவுறுதல் = ஊடுதல்
செலத்தி = புண்
செலவழுங்குதல் = பிரிதலைக்கெடுத்தல்
செலவு = பயணம், படை எடுப்பு, வழி, ஒழுக்கம், விதி, விடை, ஓட்டம், இறந்தகாலம், பிரிவு, ஆலாபனம், பொருளழிவு
செலு = மீன், சிறை
செல் = மேகம், கடன், இடி போதல், பற்று, வேல், கரையான், ஆகாயம்
செல்கதி = பிழைப்பு, புகலிடம்
செல்லல் = துன்பம், கெடுதல், போதல், பரத்தல்