பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தருப்பம்

208

தவிசு


தருப்பம் = கர்வம், அகங்காரம் தருமசமஸ்காரம் = அநாதைப் பிணத்தைச் சுடுதல் தருமசாஸ்திரம் = ஸ்மிருதி தருமதேவதை = இயமன் தருமபுரம் = இயமன் உலகு தருமம் = இயல்பு, நீதி, நல்வினை, அறம், கடமை, ஈகை தருவி = அகப்பை தரை = பூமி தா்ச்சனி = சுட்டுவிரல் தலம் = இலை, பூமி, இடம், க்ஷேத்திரம் தலைஇ = பெய்து தலைகவிழ்தல் = நாணுதல் தலைக்கடை = முதல்வாயில் தலைக்கிடு = தலைப்பாகை தலைக்கோலம் = தலையணி தலைச்சாத்து = தலைப்பாகை தலைத்தலை = இடம் தோறும், ஒவ்வொருவரும் தலைமக்கள் = மேன்மக்கள், வீரர் தலைமயங்குதல் = கலத்தல், கூடுதல், பெருகுதல், கெடுதல் தலைமாடு = தலைப்புறம் தலைய =பெய்ய தலையல் = முதல்மழை,தூரல் தலையளி = பேரன்பு, முகம் மலர்ந்து கூறுதல் தலையளித்தல் = காத்தல், பேரன்பு செய்தல் தலையாயார் = பெரியோர் தலையாரி = காவற்காரன் தலைவன் = இறைவன், அரசன் தலைவி = மனைவி தவ = மிக தவசம் = தானியம், பலபண்டம் தவண்டை =பேருடுக்கை தவத்தல் = நீங்குதல் தவம் = பேரன்பு, புண்ணியம், கற்பு, தோத்திரம் தவர் = வில், துளை முனிவா் தவல் = குறைவு, பிழைபடுதல், குற்றம், கெடுதல், இறத்தல், வறுமையால் வாடல் தவளச்சத்திரம் = வெண்குடை தவளம் = கர்ப்பூரம், அழகு, வெண்மை தவறுதல் = இறத்தல் தவனம் = வெப்பம், தவனன் = சூரியன் தவாநிலை = வழுவாநிலை தவிசு = ஆசனம், தடுக்கு, பீடம், மெத்தை