பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தம்மவன்

207

தருப்பதம்


தம்மவன் = உறவினன்
தம்மனை = தாய்
தம்மான் = தலைவன்
தம்மில்லம் = மயிா்முடி, தம்வீடு
தம்முன் = அண்ணன்
தம்மை = தாய்
தம்மோய் = தாய்
தயக்கம் = விளக்கம்,ஒளிவிடுகை,அசைவு, வாடுதல்
தயங்குதல் = விளங்குதல், அசைதல், திகைத்தல்
தயித்தியா் = அசுரர்
தயினியம் = எளிமை
தரக்கு = புலி
தரங்கம் = அலை, கடல், ஈட்டி, மனக்கலக்கம்
தரங்கிணி = ஆறு
தரணம் = அாித்தல்,கடத்தல்
தரணி = சூாியன், ஓடம், பூமி, மலை, வைத்தியன்
தரம் = உயர்வு, தலை, வகை, வீதம், முறை, வலி, மலை, வீரம், மட்டம், வரிசை
தரவு = கட்டளை, தருதல்
தரளம் = முத்து, அசைவு, ஒளி
தரா = செம்பும் காா் ஈயமும் கலந்த உலோகம்
தராதரம் = உயர்வு தாழ்வு
தராதலம் = பூமி
தராபதி = அரசன்
தராய் = மேட்டுநிலம்
தராவலயம் = பூகோளம்
தரிசனம் = அறிவு, கண்ணாடி, கனா, காட்சி, வழிபாடு, சாத்திரம், மதக்கொள்கை
தரிசனவேதி = காட்சியில் இரும்பைப் பொன்னாக்கும் மருந்து
தரிசு = விளைவு அற்ற நிலம், பரல்கல்
தரித்தல் = பொறுத்தல், தங்கல், அணிதல், தாமதித்தல்,தாங்குதல்
தரித்திரி = பூமி
தாிப்பு = பொறுத்தல்
தாியலா் & தாியாா் = பகைவர்
தரு = மரம், கற்பகம்
தருகை = ஈகை
தருக்கம் = மேம்பாடு
தருக்கு = அகங்காரம், மகிழ்ச்சி
தருக்குதல் = வருந்துதல், உடைத்தல், அலங்கரித்தல், மகிழ்தல்
தருணம் = இளமை, சமயம், புதுமை
தருணன் = காளை
தருணி = இளம்பெண்
தருப்பணம் = ஒம விறகு, கண்ணாடி