பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தந்திரம்

206

தம்பிரான்


தந்திரம் = செல்வம், கல்வி, நூல், தொழில், உபாயம், பிரதானம், படை, வீடு, காரணம், ஆகமம்
தந்திாி = மந்திரி, யாழ் நரம்பு, படைத்தலைவன்
தந்து = கயிறு, தந்திரம், நூல், கல்வி
தந்துரை = பாயிரம்
தந்துவரயன் = சிலம்பி,நெய்பவன்
தந்துவை = மாமியார்
தபதி = தச்சன், சிற்பி
தபனம் = வெப்பம், தாகம்
தபனன் = அக்கினி,சூாியன்
தபனியம் & தபனீயம்) = பொன்
தபுதல் = சாதல், கெடுதல்
தபுதாரநிலை = மனையாள் இறந்த நிலை
தபுதி = அழிவு
தபுத்தல் = கெடுத்தல்
தபோநிதி = முனிவன்
தமசு = ஆணவமலம், இருள்
தமம் = இராகு,இருள், நிக்கிரகம், புறக்கரணம் அடக்கல்
தமரகம் = சுவாசக்குழல்
தமரம் = இசை, ஒலி
தமாிடுதல் = துளைத்தல்
தமருகம் = உடுக்கை
தாம் = உறவினர், துணைசுற்றம்
தமனம் = மருக்கொழுந்து
தமனியம் = பொன்
தமாலம் = இலை, பச்சிலை, மரம், பச்சிலைக்கொடி
தமி = தனிமை
தமித்தல் = தனித்தல்
தமியன் = ஏழை, தனித்தவன்
தமிழ் = இனிமை, நீர்மை, தமிழ்மொழி, தேவாரம்
தமிழ் நாடன் = பாண்டியன்
தமிழ்நாடு = பாண்டிநாடு
தமிழ்மலை = பொதிகைமலை
தமிழ்முனி = அகத்தியன்
தமிழ்வாணர் = தமிழ்ப்புலவா்
தமை = அடக்கல், புறக்கரணம்
தமோகுணம் = காமகோப மயக்கக் குணம்
தம்பதி = புருஷன்மனைவி
தம்பம் = தூண், கவசம், வஞ்சனை
தம்பித்தல் = அசையாதிருத்தல்
தம்பலம் = தாம்பூலம், வெற்றிலை தம்பிராட்டி = தலைவி
தம்பிரான் = பசுபதி, கடவுள்,தலைவன், உயிர்நாயகன்