பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தண்டுதல்

205

தந்தியுாியோன்


தண்டுதல் = மனமமைதல், வருந்துதல், தணிதல், நீங்குதல், இணைத்தல்
தண்டுலம் = அரிசி
தண்டை = வால், மாதா் கால்அணி, கேடகம்
தண்ணடை = நாடு, பச்சிலை, மருத நிலத்தூா்
தண்ணம் = ஒருகண் பறை, மழு,
தண்ணவன் = சந்திரன்
தண்ணனி = கிருபை
தண்ணுமை = மத்தளம்
தண்பணை = மருத நிலம்
தண்பதம் = புது நீா், தாழ்நிலை
தண்மை = குளிர்மை, எளிமை, சாந்தம், புல்லறிவு, இன்பம், மென்மை, தாழ்வு
ததரல் = மரப்பட்டை
ததர் = அடர்த்தி, கொத்து, சிதறல்
ததர்த்தல் = வருத்துதல்
ததா = அப்படி
ததாகதன் = புத்தன்
ததாகாரம் = அந்த ரூபம்
ததாஸ்து = அப்படியேயாகுக
ததி = தயிா், கூட்டம், சமயம், பலம்
ததியா் = அடியாா்
ததியோதனம் = தயிர்ச்சாதம்
ததும்புதல் = முழங்குதல், நிறைதல்
ததைதல் = நெருங்கல்,சிதறல்
தத் = அது, ஒற்றுமை
ததைந்த = செறிந்து மலர்ந்த
தத்தம் = ஈகை
தத்தல் = தாண்டுதல்
தத்து = சுவீகாரம், ஆபத்து, தவறு
தத்துவஞானம் = உண்மை ஞானம்
தத்துவப்பொருள் = கடவுள்
தத்துவமசி = அது நீயாகிறாய், அது நீ
தத்துவம் = உண்மை, இயற்கை, பொருள்
தத்துவாதீதன் = கடவுள்
தத்துறுதல் = வருத்தப்படுதல்
தத்தை = கிளி, முன் பிறந்தவள்
தந்ததாவனம் = பல்சுத்தி
தந்தம் = யானைக் கொம்பு, பல், மலைமுகடு
தந்தாவளம் = யானை தந்தி = யானை, யாழ், நரம்பு, பாம்பு
தந்திமுகன் = வினாயகர்
தந்தியுாியோன் = சிவன்