பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அல்

20

அவநிகேள்வன்


அல் = இரவு, இருள், மதில், மயக்கம், மெய்யெழுத்து, வறுமை
அல்கந்தி = அந்திப்பொழுது
அல்கலும் = நாள்தோறும்
அல்கல் = சுருங்கல், தங்கல், நாள், வறுமை, இரவு
அல்கு = சிறுமை, இரவு, மாலைப்பொழுது
அல்குதல் = குறைதல், தங்குதல், சுருங்குதல், நிலைத்துநிற்றல், அழிதல்
அல்குல் = பெண்குறி
அல்லகம் = நீலோற்பலம், கோவணம்
அல்லகண்டம் = துன்பம்
அல்லங்காடி = அந்திக்கடை
அல்லகாத்திரி = தணிகைமலை
அல்லது = தீமை
அல்லம் = இஞ்சி
அல்லல் = துன்பம், முடைதல்
அல்லவை = தீயவை, ஒழிந்தவை
அல்லாத்தல் = மகிழ்தல், துன்புறுதல்
அல்லி = அக இதழ், ஆல், காயா, பூந்தாது
அல்லியம் = விஷ்ணு கூத்து, இடையர் ஊர்
அல்லியன் = குழுவைப் பிரிந்த யானை
அல்லியான் = பிரமன்
அல்லோன் = சந்திரன்
அல்வழி = நல்லது அல்லாத வழி
அவா = நிச்சயம், நிறைவு, வெறுப்பு,சுத்தம், நிந்தை, அப்பால்
அவகடம் = எதிர், வஞ்சகம், தாறுமாறு, அலட்சியம்
அவகேசி = பாதிரி மரம், பூத்தும் காயாதது
அவசம் = மகிழ்ச்சி, தன்வசப்படாமை
அவசரம் = கோலம், சுறுக்கு
அவசானம் = எல்லை, மரணம், முடிவு
அவண் = அவ்விடம்
அவதாணிகை = முகவுரை
அவதாரம் = இறங்குதல், பிறத்தல்
அவதாரிகை = முகவுரை
அவதானம் = கவனம், மேன்மைச் செயல்
அவதி = அளவு, விதி, காலப்பகுதி, எல்லை, துயர், முற்பிறப்பு, முக்காலம்
அவத்தம் = வீண்
அவநி = பூமி
அவநிகேள்வன் = திருமால்