பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தை




  
தை = தைத்தல், தைமாதம், அலங்காரம், பூசநாள், அத்திப்பிசின்
தைசசம் = நெய், பலம், உலோகம்
தைசதம் = சத்துவகுண அகங்காரம்
தைதம் = விரல் நுனி
தைதிலம் = காண்டாமிருகம்
தைத்தல் = உட்புகுதல், பொருத்துதல், அலங்கரித்தல், பதித்தல், சூழ்தல்
தைத்தியர் = அசுரர்
தைத்தியாரி = திருமால்
தைத்திரம் = சிச்சிலிக்குருவி
தைநம் = எளிமை
தையல் = அழகு, பெண், தைத்தல், மேகம்
தைலமாட்டுதல் = எண்ணெய் முழுக்கு, பின் அலங்காரம் பண்ணல்
தைலி = பணப்பை
தைவதம் = தெய்வம், இசைசுரம்
தைவதீபம் = கண்
தைவம் = ஊழ், பாக்கியம்
தைவருதல் = துடைத்தல், தடவுதல்
தைவலேககன் = சோதிடர்
தைவாகரி = எமன் , சனி
தைவிகம் = தேவசம்பந்தமுடையது, தெய்வச் செயலாய்ச் சம்பவிப்பது


தொ


தொகுதல் = மறைதல், சுருங்குதல்
தொகை = கணக்கு, புலவர், கழகம், மொத்தம்
தொக்கு = உடல், தோல், துவையல், மரப்பட்டை, பற்று, அற்பம்
தொங்கல் = குடை, மாலை, மயில் தோகை
தொடக்கு = தீட்டு, கட்டு, பற்று
தொடர் = சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
தொடர்பு = உறவு, ஒழுங்கு, பாட்டு, சிநேகம்
தொடலை = மகளிர் விளையாட்டு, மாலை, மேகலை