பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடைப்பரிகாரம்

238


நடைப்பரிகாரம் = வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்கள் நடைபாவி = படிக்கிணறு நடைமலை = யானை நட்சத்திரேசன் = சந்திரன் நட்டல் = நடுதல், சினேகம் பண்ணுதல் நட்டார் = உறவினர், சிநேகிதா் நட்டுவம் = நாட்டியம் நட்டாோ் = உறவினா் நணி = அணிமை நணுகலர் = பகைவர் நண்ணலர் = பகைவா் நண்ணாா் = பகைவர் நண்ணுதல் = பாெருந்துதல், கிட்டுதல், செய்தல் நண்மை = சமீபம் நதம் = மேற்கேயாேடும் ஆறு நதி = யாறு, கிழக்கோடும் ஆறு, வணக்கம் நதிபதி = கடல், வருணன் நதுத்தல் = அவித்தல், கெடுதல், மறைத்தல் நத்தமாலம் = புன்கமரம் நத்தம் = ஊர், சங்கு, வாழை, கெடுதல், வளர்தல், இரவு, ஆக்கம் நத்து = சங்கு, மூக்கணி, விருப்பம் நத்துதல் = விரும்புதல், அண்டுதல் நத்தை = கடுகு, சங்கு நந்தகம் = வாள் தந்தம் = சங்கு,பெருமகிழ்ச்சி நந்தனம் = பூந்தாேட்டம், நத்தை, தவளை, இந்திரன் நந்தவனம் நந்தனன் = மகன், மகிழ்விப்பவன் நந்தன் = புத்திரன், கிருஷ்ணன் தந்தை, இடையன், திருமால் நந்தாமணி = சிறந்தமணி நந்தி = சிவன், எருது, பேரிகை, சாணா் பட்டப்பெயா் நந்தினி = மகள் நந்து = ஆக்கம், சங்கு, பறவை நந்துதல் = கெடுதல், அவிதல்,குறைதல், வளர்தல், தழைத்தல், மறைதல் விளங்குதல், செருக்குதல், துாண்டுதல் நந்தை = கலப்பைக் கயிறு, கபிலப் பசு நபம் = கார்காலம் நபனம் = அபிடேகம் நபீ = தீர்க்கதரிசி