பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நபுஞ்சகம்

239

நரன்


நபுஞ்சகம் = பேடு, அலித்தன்மை நபுஞ்சகன் = பேடன் நப்பின்னை = கிருஷ்ணன் மனைவி, இலக்குமி நமகம் = உருத்திர மந்திரம் நமலுதல் = வணங்குதல் நமன் = இயமன், நம்மவன் நமித்திரா் = பகைவர் நமைத்தல் = தின்றல், குட்டுதல், வருந்துதல் நம்பன் = சிவன், கடவுள் நம்பி = ஆடவரில் சிறந்தவன் நம்பிக்கை = விசுவாசம் நம்பு = நசை, நாவல் நம்பூதிாி = மலையாள பிராமணாில் உயா்ந்தவா் நயத்தல் = மகிழ்தல், மலிதல், நீதி புரிதல், விரும்பல் நயந்தோர் = சிநேகிதா் நயப்பு = அன்பு, ஆசை, மலிவு, சந்தோஷம், நயம்புணர்வு = தாட்சண்யம் நயம் = மகிழ்ச்சி, இன்பம், நன்மை, நீதி, மலிவு, நற்பயன், அருள், அன்பு நயனம் = கண் நயன் = அருள், அன்பு, உபாயம் நயீட்டிகப் பிரமசாாி = காலமெல்லாம் பிரமசாரியாகவே இருந்து வாழ்பவன் நயினாா் = ஆண்டவன், எசமானன் நரகரி = நரசிங்கம் நரகா் = கீழ் உலகவாசிகள் நரகல் = மலம் நரங்குதல் = தேய்ந்து தேய்ந்து கெடுதல் நரதேவன் = அரசன் நரந்தம் = கஸ்தூரி, நாரத்தை, ஒரு புல் நரபதி = அரசன் நரபாலன் = அரசன் நரமடங்கல் = நரசிங்கம் நரமேதம் = நரபலியிட்டுச் செய்யப்படும் யாகம் நரம்பு = நார், நாடி, தந்தி நரர் = மனிதர் நாலுதல் = ஒலித்தல், கத்துதல் நரலை = கடல், ஒலி, மதில் உறுப்பில் ஒன்று நரலோகம் = பூமி நரவரி = நரசிங்கம் நரவாகனம் - பல்லக்கு நரவாகனன் = குபேரன் நரற்றல் = ஒலித்தல் நரன் = அருச்சுனன், மனிதன்