பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றாய்

242

நாகரம்


  
நற்றாய் = பெற்றதாய்
நற்றிறம் = நீதிநெறி, நோன்பு
நற்றம் = நற்குணம்
நற்று = நன்மை
நனந்தலை = உச்சி, நடுவிடம், திசை, அகல், இடம்
நனவு = தெளிவு, தோற்றம், பரப்பு, பகல், மெய்மை
நனம் = அகற்சி
நன்காடு = சுடுகாடு
நனி = மிகுதி
நனை = கள், தேன், பூவரும்பு
நனைவு = ஈரம்
நன்கு = அழகு, நன்மை, மிகுதி
நன்குணர்தல் = கற்றறிதல்
நன்கொடை = உபகாரத்தின் பொருட்டுக் கொடுக்கப்படும் பொருள்
நன்செய் = நெல், கோதுமை விளையும் நிலம்
நன்மை = நலம், பயன், மேம்பாடு, வாழ்த்து, அழகு
நன்மையாகுதல் = ருதுவாதல்
நன்றி = அறம், உபகாரம்
நன்றிகோறல் = செய்ந்நன்றி மறத்தல்
நன்றியறிதல் = செய்ந்நன்றியை மறவாதிருத்தல்
நன்று = சுகம், நன்மை, நல்வினை, பெரிது, ஆக்கம், நற்குணம்
நன்னடை = நல் ஒழுக்கம்
நன்னயம் = நன்மை
நன்னர் = நன்மை
நன்னி = சிறியது
நன்னலம் = மேன்மை
நன்னிலை = தவம், நல் ஒழுக்கம்

நா


நா = நடு, நாக்கு, பேச்சு, பொலிவு
நாகணவாய்ப்புள் = மைனாப்பறவை
நாகநாதன் = இந்திரன்
நாகபாசம் = பாம்பு வடிவான கயிறு
நாகபூஷணன் = பாம்பை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான்
நாகம் = ஆகாயம், குரங்கு, மேகம், தேவலோகம், நற்புடைவை, பாம்பு,
புன்னைமரம், மலையானை
நாகரம் = வடமொழி எழுத்து