பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவரதம்

241

நற்றமிழ்


  
நவரதம் = ஒன்பது சுவைகள்
நவியம் = கோடரி, மழு, புதுமை
நவிரம் = ஆண் மயிர், புன்மை, மயில், உச்சந்தலை, வாள்
தவிர் = ஆண் மயிர், வாள்
நவிலுதல் = பயிலல், சொல்லல்,செய்தல், கற்றல், பழகுதல், தாங்குதல்,குறித்தல்
நவிழ்த்தல் = அவித்தல்
நவிற்றல் = சொல்லல்
நவீனம் = புதுமை
நவை = குற்றம், இகழ்ச்சி, தண்டனை
நவ்வல் = நாவல்
நவ்வு = மான், அஸ்த நட்சத்திரம், அழகு, மரக்கலம்
நவ்வியம் = புதுமை
நவ்வி = தோணி
நளி = குளிர், நெருக்கம், பெருமை, அகலம், தேள்
நளிதல் = பரத்தல், ஒத்தல்
நளிர் = நண்டு, குளிர், பகை
நளினம் = தாமரை, நீர், பாசி, இனிமை
நளினி = இலக்குமி, தாமரை, குளம்
நள் = இரவு, நடு
31
நள்ளலர் = பகைவர்
நள்ஷ்ர் = பகைவர்
நள்ளி = நண்டு, உறவு
நள்ளிருணாறி = இருவாட்சிப் பூ
நள்ளிருள் = அடர்ந்த இருள்
நள்ளுதல் = நட்புக் கொள்ளுதல், விரும்புதல்
நள்ளுநர் = நண்பர்
நறவம் = அனிச்சமரம், கள், மணம், தேன், பால்
நறவு = கள், தேன், வாசனை
நறா = கள், தேன், வாசனை
நறுக்கு = ஓலைத்துண்டு
நறுங்காழ் = சந்தனம், அகில்
நறுநாற்றம் = நல்மணம்
நறுநுதல் = நல்லநெற்றி, நல்ல நெற்றியுடைய பெண்
நறுநெய் = பசுநெய்
நறுமணம் = நல்ல வாசனை
நறுமருப்பு = இஞ்சி
நறுமை = நன்மை, வாசனை
நறை = தேன், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக் கொடி, குற்றம் நற்கதி = மோட்சம்
நற்கந்தம் = நன்மணம்
நற்றம் = நற்குணம்
நற்றமிழ் = தூய தமிழ், இனிய தமிழ்