பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிருத்தன்

250

நிலைவரம்


  
நிருத்தன் = நடராசன்
நிருபதி = அரசன், குபேரன்
நிருபம் = கடிதம், கட்டளை
நிருபமன் = ஒப்பில்லாதவன்
நிருமன் = அரசன்
நிருமலம் = குற்றமற்றது
நிருமாணம் = நிருமித்தல்
நிருமாலியம் = பூசித்துக் கழித்த பொருள்கள்
நிருவணம் = மோட்சம், ஆடையில்லா நிலை
நிருவாணி = அருகன. திகம்பரன்
நிருவிகற்பம் = ஒருமையுணர்ச்சி
நிருவிகாரம் = விகாரம் இன்மை
நிருவிக்கினம் = தடையின்மை
நிருவிசாரம் = கவலையின்மை
நிருபணம் = ஆராய்தல்
நிரை = ஒழுங்கு, வரிசை, பசு
நிரைச்சல் = படை வகுப்பு, இரவல், மறைப்பு
நிரைத்தல் = நிரம்புதல், கோத்தல், பரப்புதல், ஒலித்தல், திரளுதல் நிரையம் = நரகம்
நிரோட்டம் = இதழ்குவித்து ஒலிக்கக்கூடிய எழுத்துக்கள் சேர்க்கப்படாமல் பாடப்படும் ஒரு வகைக்கவி
நிர்குணம் = குணம் இன்மை
நிர்க்குணன் = கடவுள்
நிர்த்தூளி = ஒன்றும் இல்லாமல்படி அழித்தல்
நிர்மாலியம் = பூசித்துக் கழித்த பொருள்
நிர்மூலம் = முழுக்கேடு
நிர்வாணம் = முத்திநிலை, அம்மணம்
நிலையம் = இடம், கோயில், படி, மருதநிலத்தூர், பூமி, நிலை, கூத்து
நிலவலயம் = பூமி
நிலவல் = ஒளிசெய்தல்
நிலவு = ஒளி, சந்திரன்
நிலவுதல் = ஒளி செய்தல், பொருந்துதல், நிலைபெதறுதல், விசாலித்தல் நிலாக்காலுதல் = ஒளிவீசுதல்
நிலாமணி = சந்திர காந்தக்கல்
நிலாமுகி = சகோரப்பறவை
நிலாமுற்றம் = மேல்மாடியில் வெட்டவெளியான இடம்
நிலை = குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
நிலையாமை = அநித்தியம்
நிலையின்மை = அநித்தியம்
நிலைவரம் = நிலைபேறு, நிச்சயம், நிலைமை