பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைதல்

258

நொறுவை


நைதல் = வதங்கல், வருந்தல், கெடுதல், குறைதல்
நைத்தல் = உண்ணல், கெடுத்தல், எரித்தல்
நைத்தியம் = நித்தியத்துவம்
நைமித்திகம் = விசேட ஆராதனை
நையல் = துன்பம், பொலிவு
நையாண்டி = இகழ்ச்சி, பரிகாசம்
நையாயிகன் = நியாயசாஸ்திரி
நைவரல் = இரங்குதல்
நைவளம் = பாலைப்பண், குறிஞ்சியாழ்த்திறம்

நொ

நொ = துன்பம்,நோய்,மென்மை
நொக்குதல் = அடித்தல்
நொங்குதல் = விழுங்குதல்
நொசிதல் = நுண்மையாதல், வளைதல், வருந்துதல்,வாடல், அருமையாதல்
நொச்சி = மதில், சிற்றூா், மதில்காத்தல், ஒரு பூ
நொடி = சொல், விடுகதை, காலநுட்பம், கைநொடிப்பு, ஒடி
நொடுத்தல் = விற்றல்
நொடை = விலை, பலபண்டம்.
நொண்டல் = முகத்தல்
நொதி = பெருஞ்சோறு
நொதுத்தல் = அழித்தல், தளர்தல்
நொதுமலா் = அயலவா்
நொதுமல் = விருப்பு வெறுப்பு இல்லாமை, அயல், மென்மை
நொந்தாா் = பகைவர்
நொப்பு = நுரை
நொய்து = வினவு, இழிவு, மெல்லியது
நொய்ப்பம் = சமா்த்து
நொய்மை = எளிமை, மென்மை
நொவ்விதாக = விரைவாக
நொவ்வு = தளர்வு, வருத்தம்
நொள்குதல் = முகத்தல் சுருங்குதல்
நொள்ளை = குருடு
நொறில் = ஒடுக்கம், விரைவு, நுடக்கம்
நொறுங்கு = சிறுநொய்
நொறுவை = சிற்றுண்டி