பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படிகாரர்

264

படுத்தல்




  
படிகாரர் = வாயிலாளர்
படிகை = யானைமேல் தவிசு
படிக்கால் = ஏணி
படிச்சந்தம் = பிரதிவடிவம்
படிதம் = மாணிக்கம், துதி
படிதல் = திருந்தல், குளித்தல், கலத்தல், அமைதல், அமர்தல், தணிதல்
படித்தரம் = நிபந்தனை
படித்தல் = சொல்லுதல், படித்தல், துதித்தல், பழகுதல்
படித்திரம் = சூட்டிறைச்சி
படித்துறை = ஸ்னான கட்டம்
படிப்பனை = போதனை
படிமக்கலம் = கண்ணாடி
படிமத்தான் = மருள்வந்து ஆடுபவன்
படிமம் = சுத்தம், வெண்மை வடிவம், பாவை, விரதம், பூதம், வெறியாட்டு
படிமா = ஒப்பு
படிமானம் = திருத்தம், விலை குறைதல், கீழ்ப்படிதல்
படிமை = தவவேடம், விரதம்
படியளந்தோன் = திருமால்
படிவம் = வடிவம், உடம்பு, தான் வழிபடு தெய்வம், விரதம், தோற்றம், தவவேடம்
படிவர் = முனிவர்
படிவு = வடிவு, குளித்தல், அழுந்துதல், அடங்குதல்
படிறர் = வஞ்சகர், திருடர்
படிறு = களவு, பொய், வஞ்சகம், கொடுமை
படீரம் = சந்தானம், கருங்காலி
படு = கள், குளம், கொடுமை, பெரிய, மரத்தின் குலை, கூர்மை, கொடிய, நிபுணன், பேர் அறிவு
படுகர் = நீர்நிலை, இறங்கி, ஏறும் வழி, பள்ளம், வயல்
படுகளம் = யுத்தகளம்
படுகாடு = சுடுகாடு
படுகால் = ஏணி
படுகை = ஆற்றங்கரை அடுத்த வயல், நீர் நிலை
படுசூரணம் = முழுநாசம், மருந்துத்தூள்
படு ஞாயிறு = மாலையில் மறையும் சூரியன்
படுதம் = கூத்துவகை
படுதல் = சாதல், அழிதல், மறைதல், துன்புறுதல், தொங்குதல், தாழ்த்தல், ஒலிதல், உடன்படுதல், பொறுத்தல், தங்குதல், உண்டாதல்
படுத்தல் = செய்தல், சேர்ப்பித்தல், வளர்த்தல், பரப்புதல், வீழ்த்துதல், தாழ்த்தல், அழித்தல், அகப்படுத்தல், கிடைத்தல், உறங்குதல்