பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படுத்துவம்

265

பட்டாங்கு




  
படுத்துவம் = வல்லமை
படுநிலம் = பாலைநிலம், மயானம்
படுபனை = காய்க்கும் பனை
படுபொருள் = நிகழ்வது, புதைபொருள்
படுவர் = கள்விற்பவர்
படுவி = கற்பில்லாதவள், குறியவர்
படுவை = தெப்பம்
படை = அடுக்கு, கல்லணை, பரிவாரம், மெத்தை, தானை, கலப்பை, நிரை, ஆயுதம்
படைக்கலம் = ஆயுதம்
படைச்சால் = உழவுச்சால்
படைத்தல் = பரிமாறுதல், பெறுதல்
படைத்துணை = போர்ச் சகாயம்
படைப்பு = செல்வம், சிருஷ்டி, சிருஷ்டிக்கப்பட்ட பொருள்
படைப்பௌஞ்சு = படை வகுப்பு
படைமுகம் = போர் முகம்
படையெடுத்தல் = சேனை எழுதல்
படையெழுச்சி = சேனையெழுதல்
படைவகுப்பு = படையணி
படைவரம் = குதிரைச்சேணம
34
படைவீடு = ஆயுதச்சாலை, பாசறை, கூடாரம்
பட்சம் = உருக்கம், பக்கம், நேசம், அன்பு, கட்சி
பட்சாந்தம் = அமாவாசை, பூர்ணிமை
பட்சிசாலம் = பறவைக் கூட்டம்
பட்சித்தல் = உண்ணல், விழுங்கல்
பட்சியம் = பலகாரம்
பட்டகசாலை = பண்டகசாலை
பட்டடைக்கழனி = தண்ணீர் இறைத்துப் பயிரிடும் கழனி
பட்டணப்பிரவேசம் = நகர் வலம் வருதல்
பட்டணவர் = செம்படவர்
பட்டம் = காற்றாடி, பருவம், நீர்நிலை, கவரிமா, குளம், நெற்றிப்பட்டம், வழி, விலங்கின் படுக்கை, பட்டம், மேலாடை, உயர் பதவி
பட்டயம் = வாள், பிரசித்தமான பத்திரிகை
பட்டர் = ஆதி சைவப்பிராமணர்
பட்டவர்த்தனர் = பட்டந் தரித்த மன்னர், சிற்றரசர்
பட்டன் = ஞானி, புலவன்
பட்டாங்கு = மெய், சாஸ்திரம்