பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரவர்

272

பரிக்காரர்




  
பரவர் = செம்படவர், வலைஞர்
பரவுதல் = துதித்தல், பரத்தல், புகழ்தல், போற்றுதல்
பரவை = கடல், ஆடல், பரப்பு
பரவைவழக்கு = உலகவழக்கு
பரற்பரம் = ஒன்றுக்கொன்று
பரன் = கடவுள், பிறன், ஆன்மா, மேலானவன், அன்னியன்
பரஸ்பரம் = ஒருவர்க்கொருவர்
பரா = மிகுதி
பராகம் = மகரந்தம், தூளி
பராக்கு = அசட்டை, பலவற்றையும் பார்த்தல், வேறு புலனாய் இருத்தல், கவனமின்மை
பராங்குசர் = நம்மாழ்வார்
பராசயம் = தோல்வி
பராசரன் = வியாசர் தந்தை
பராசியம் = பலர் அறிந்தது
பாராதீனம் = சுதந்திரமற்றது
பராபரம் = சிவம்
பராபரன் = பரமேசுவரன்
பராபரை = பார்வதி
பராபவம் = தோல்வி, அபசாரம்
பராமரிசம் = ஆராய்ச்சி
பராமரித்தல் = வளர்த்தல், ஆலோசித்தல், ஆதரித்தல்
பராமரிப்பு = விசாரிப்பு
பராமுகம் = முகம்கொடாமை
பராயணம் = பெருவிருப்பு, நன்னிலை, குறிப்பு
பராயத்தம் = பிறர் ஆதீனம்
பராரை = பருமரத்தடி
பரார்த்தம் = ஆயிரங்கோடி, பிறர்க்கு உபகாரமானது
பராவணம் = துதிக்கப்படும் பொருள்
பராவு = வாழ்த்து, வணங்குதல்
பரான்னம் = பிறர் கொடுத்த போசனம்
பரி = குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி
பரிகம் = அகழி, வளைதடி
பரிகரம் = இடைக்கட்டு, பரிவாரம், கட்டில்
பரிகரித்தல் = நீக்கல், கடத்தல், முற்றக்களைதல்
பரிகலச்சேடம் = உச்சிட்டம்
பரிகலம் = சேனை, பரிவாரம், குருமார் உண்கலம்
பரிகாரம் = நீக்குகை, மாற்று மருந்து, பிராயசித்தம்
பரிகாரி = அம்பட்டன், வைத்தியன்
பரிக்காரர் = குத்துக்கோல்காரர்